பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/586

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

589 . செவ்வரிகற் கருநெடுங்கட் சீதைக் காகிச் சினவிடையோன் சிலையிறுத்து மழுவாளேந்தி வெவ்வரிகற் சிலைவாங்கி வென்றி கொண்டு வேல்வேந்தர் பகைதடிந்த வீரன்' என்ற அடிகளிற் சொல்லப்படுகின்றன. கைகேயி சொல் தேறி அயோத்தி நீங்கி வனம் புக்கதும், கங்கையைக் கடக்கக் குகன் ஒடஞ் செலுத்தி யுத வியதும், பரதனுக்குப் பாதுகையும் அரசும் நல்கியது ஆன செயல்கள், தொத்தலர்பூஞ் சுரிகுழற்கை கேயி சொல்லால் தொன்னகரங் துறந்துறைக் கங்கை தன்னைப் பத்தியுடைக் குகன் கடத்த வனம் போய்ப்புக்குப் பரதனுக்குப் பாதுகமு மரசு மீந்து ' என்ற அடிகளிற் சுட்டப்படுகின்றன. பிறர் வலியைத் தோற்பிக்கும் தோள் வலிமையை யுடைய விராதனைக் கொன்று, அகத்திய முனிவர் கொடுத்த வில்லைப் பெற்று, சூர்ப்பணகையின் மூக்கை யறுத்து, கரன் துTடணன் என்னும் அரக்கர்களின் உயிரை நீக்கி, மாரீசனாகிய மாய மான் அழியும்படி வில்லை. வளைத்து அம்புகளை யெய்தான் இராமன் என்ற செய்தி பின்வருமாறு விளங்கக் கூறப்பட்டுள்ளது:

  • வலிவணக்கு வரைநெடுங்தோள் விராதைக் கொன்று

வண்டமிழ்மா முனிகொடுத்த வரிவில் வாங்கிக் கலைவணக்கு நோக்கரக்கி மூக்கை நீக்கிக் கரனோடு துண்டணன்றன் னுயிரை வாங்கிச் சிலைவணக்கி மான்மறிய வெய்தான். ' சீதையை இராவணன் சூழ்ச்சியாற் கவர்ந்துசெல்ல அவளைப் பிரிந்து வருந்தி, இராவணனோடு பொருது, 115. பெருமாள் திருமொழி; 10 : 3 : 1.2. 116. பெருமாள் திருமொழி; 10 : 4 : 1.2. 117. பெருமாள் திருமொழி; 10 : 5 : 1.3.