பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/588

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

591 கேட்டு, மிதிலைச் செல்வியாம் சீதையின் வயிற்றிற் றோன்டிய பிள்ளைகளான குசறி லவர்களுடைய சிவந்த வாயினால் தனது சரித்திரத்தைக் கேட்டான் இராமன் என்று பின் வரும் பாவடிகள் தெரிவிக்கின்றன. அம்பொனெடு மணிமாட வயோத்தி யெய்தி அரசெய்தி யகத்தியன்வாய்த் தான்முன் கொன்றான் தன் பெருந்தொல் கதைகேட்டு மிதிலைச் செல்வி உலகுய்யத் திருவயிறு வாய்த்த மக்கள் செம்பவளத் திரள்வாய்த்தன் சரிதை கேட்டான். ' இச் செய்திகள் இராமாயணம் உத்தரகாண்டத்துள் இடம் பெற்றுள்ளன என்பர். மிக்க தவத்தையுடைய சம்புகனை அவ னிருக்குமிடந் தேடிச் சென்று தலையறுத்துச் சிறந்த அந்தண குமாரனின் உயிரை மீட்டுக் கொடுத்து, அகத்திய முனிவன் தந்த விலையுயர்ந்த அணியினையும் சாத்தியருளி இலவணன் என்னும் அசுரனைத் தன் தம்பி சத்துருக்கனைக் கொண்டு கொன்று, துர்வாச முனிவனுடைய சாபத்தால் திறல் விளங்கும் தன் இளவல் இலக்குவனைத் துறந்து நின்றான் இராமன் என்ற செய்தியினைப் பின்வரும் பாடற் றொடர்கள் பாங்குற மொழிகின்றன: ' செறிதவச்சம் புகன்றன்னைச் சென்று கொன்று செழுமறையோ னுயிர் மீட்டுத் தவத்தோ னீந்த நிறைமணிப்பூ ணணியுங்கொண் டிலவணன் றன்னைத் தம்பியால் வானேற்றி முனிவன் வேண்டத் திறல்விளங்கு மிலக்குமனைப் பிரிந்தான். தன்னடிச் சோதிக் கெழுந்தருளுகிற நாளில் அயோத்தி யிலுள்ள தாவர சங்கமப் பொருள்கள் அனைத்தையும் பரமபதத்திற்குப் போகச் செய்து, கருடாழ்வார்மீது ஏறிக் 120. பெருமாள் திருமொழி; 10 : 8 : 1.3. 121. பெருமாள் திருமொழி; 10: 9:1-3.