பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/589

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

592 கொண்டு அசுரர்களை வென்று, விளங்கப்பெற்ற அழகிய நீண்ட தனது திருக்கைகள் நான்கும் விளங்கப் பரமபதத்தி லுள்ளார் எல்லாரும் எதிர்கொண்டு உபசரிக்கும்படி தன்னுடைய பழமையான பரமபதத்தினைச் சேர்ந்து இனிது வீற்றிருந்த எம்பெருமான் என்று இராமனைக் குலசேகரர் கொண்டாடுகின்றார்:

  • அன்று சரா சரங்களைவை குந்தத் தேற்றி

அடலவ ரவப் பகையேறி யசுரர் தம்மை வெண்றிலங்கு மணிநெடுந்தோள் நான்குங் தோன்ற விண்முழுது மெதிர்வரத்தன் தாம மேவிச் சென்றினிது வீற்றிருந்த அம்மான். 22 இவ்வாறு இராமகாதைக் குறிப்புகள் பெருமாள் திருமொழியில் அமைந்திருக்கக் காணலாம். 1X. கிருட்டினாவதாரக் கதை நிகழ்ச்சிகள் கிருட்டினாவதாரக் கதை நிகழ்ச்சிகள் பெருமாள் திருமொழியிற் பெரிதும் இடம் பெற்றிருக்கக் காணலாம். முதல் திருமொழியில், குதிரையின் வடிவங்கொண்டு வந்த கேசி என்னும் அசுரனின் வாயினைக் கிழித்தவன் என்றும், இந்திரன் . கல்மழை பெய்வித்த காலத்திலே வலிய கோவர்த்தன மலையைக் குடையாகத் துரக்கிப் பசுக்களைக் காப்பாற்றி யருளிய இடையர் குலத் தலைவன் என்றும் கண்ணன் குறிப் பிடப்படுகின்றான்:

  • மாவினைவாய் பிளந்துகந்த மாலை வேலை

வண்ணனையென் கண்ணனைவன் குன்றமேந்தி ஆவினையன் றுயக் கொண்ட ஆயரேறு. 123 122. பெருமாள் திருமொழி; 10:10:13. 123. பெருமாள் திருமொழி; 1: 4: 1.2.