பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/590

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

593 இதழ்கள் மிகுந்துள்ள தாமரைப்பூவிற் பிறந்த பிராட்டியினது திருத்தோள்களோடு அணைந்து கட்டிக் கொண்டதும், புஜரையுடைய அம்பினால் நீண்ட மரா மரங்கள் ஏழினைத் துளை செய்து தள்ளியதும், பசுக் கட்டங்களை மேய்த்ததும் ஆகிய செய்திகள் பின்வரும் பாடற் பகுதியில் அமைந்திருக்கக் காணலாம்: தோடு லாமலர் மங்கை தோளிணை தோய்ந்த துஞ்சுடர் வாளியால் நீடு மாமரஞ் செற்ற துங்கிரை மேய்த்ததும். ' நப்பின்னை பொருட்டு ஏழு இடபங்களை வலியடக்கிய தான கிருட்டினாவதாரச் செய்தியுடன், பன்றியாய் வடிவெடுத்துப் பூமியைக் கோட்டாற் குத்தியெடுத்ததும், சக்ரவர்த்தித் திருமகனாகப் பிறந்து அரக்கர்களைக் கொன்றொழித்ததும், திருவிக்கிரமாவதாரம் எடுத்து உலகளந்ததுமான செய்திகள் பின்வரும் பாடலிற் கண்டுள்ளன. ஏற டர்த்ததும் ஏன மாய்நிலங் கீண்ட தும்முன் னிராமனாய் மாற டர்த்ததும் மண்ண ளந்ததும். தோய்த்துக் குளிர்ந்த வெண்ணெயையும் பாலையும் ஒரே காலத்தில் அமுது செய்தவளவில் யசோதைப் பிராட்டி அக்களவினைக் கண்டுவிட்டுக் கோபித்துப் பின்னர் உரலிலே பிடித்துக் கட்டிப்போட்ட செய்தி அடியிற் காணும் பாடலில் அமைந்துள்ளது: தோய்த்த தண்டயிர் வெண்ணெய் பாலுட னுண்ட தும்முடன் றாய்ச்சிகண் டார்த்த தோளுடை யெம்பிரான்.'" 124. பெருமாள் திருமொழி; 2 : 2 : 1 125. பெருமாள் திருமொழி; 2 : 3 : 1 126. பெருமாள் திருமொழி; 2 : 4 : 1 சே. செ. இ.38 2. 2. 2