பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/591

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

594 சினக்குரலையுடைய ஏழு இடபங்களின் கொம்புகளை முறித்தவன், போரிட வந்த காளிங்கனாகிய பாம்பின் வலியடக்கியவன் என்று கண்ணன் திருவிளையாடல் குறிக்கப் பெறுகின்றது: பொய்ச்சி லைக்குரல் ஏற்றெ ருத்த மிறுத்துப் போரர வீர்த்தகோன்.' ஆறாந் திருமொழி முற்றிலும் கண்ணன் ஆயர்பாடியில் கோபிகைகளோடு கூடி நிகழ்த்திய திருவிளையாடல்களே யாகும். இரட்டை மருதமரங்களை முறித்துத் தள்ளிய செய்தி, மருதிறுத் قيrti8ها ت என்ற அளவில் குறிக்கப் பெறுகிறது. பூதனையின் முலையிலே வாயை வைத்து அம்முலை மீது தடவிக் கிடந்த நஞ்சினை உறிஞ்சி அமுது செய்த செய்தி,

  • தாய்முலைப் பாலில் அமுதி ருக்கத்

தவழ்ந்து தளர்நடை யிட்டுச் சென்று பேய்முலை வாய்வைத்து நஞ்சை புண்டு என்று பேசப்பட்டுள்ளது. கோவர்த்தன மலையைக் குடையாகத் தாங்கியது: கோலக் குரவை அயர்ந்தது, குடக் கூத்தாடியது, கன்றாய் வந்த ஒர் அசுரனைக் கொண்டு விளாமரமாய் நின்ற அசுரன் மீது எறிந்து விளங்காய்களை உதிர்த்தது, காளிங்கன் என்னும் பாம் பின் மீது நின்று கூத்தாடி அதன் வலியை அடக்கியது ஆகிய செயல்கள் பின்வரும் பாட்டில் இடம் பெற்றுள்ளன. 127 பெருமாள் திருமொழி; 2: 5 : 1. 128. பெருமாள் திருமொழி; 6 3 : 4. 129. பெருமாள் திருமொழி; 6: 4 : 1.2.