பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/593

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

596 ஆதிசேடன் உமிழ்ந்த செந்தீயானது, மலரால் அமைத்த விதானம் போன்றுள்ளது: ‘‘ ------------------ அழல் நாகம் உமிழ்ந்த செந்தீ வியாத மலர்ச் சென்னி விதானமே போல். காயாம்பூவினாலே தொடுக்கப்பட்ட நீலமலர் மாலை யைப் போன்றவன் என்று திருமால் குறிக்கப் பெறுகிறான்: காயாம்பூ மலர்ப்பிறங்க லன்ன மால். 6 அரங்கத்தம்மான் திருக்கோயிலில் முழங்கும் முழ வோசை கடலோசை போன்றிருக்கும்.

  • சீரார்ந்த முழவோசை பரவை காட்டும். ! கடல்போன்று கருநீல நிறங்கொண்டு விளங்கும் திருவரங்கத்தம்மான் என்பது,

கடல் விளங்கு கருமேனி யம்மான்' எனக் குறிக்கப்பட்டுள்ளது. நூலினை ஒத்த இடையுடைய மகளிர், நூலி னேரிடை யார் எனக் குறிக்கப்படுகின்றனர். இவ்வுவமை நூல் போன்று மெல்லிய இடையினை உடைய பெண்களைக் குறிக்கின்றது. பெண்களின் நுண்ணிய இடை மின்னலோடு ஒப்பிடப் பட்டுள்ளது. மின்னனைய நுண்ணிடையார்' வெண்கொற்றக்குடை முழுநிலவுக்கு உவமை கூறப் பட்டுள்ளது: 135. பெருமாள் திருமொழி: 1 : 2

1-2. 136. பெருமாள் திருமொழி; 1 : 2 : 3

137. பெருமாள் திருமொழி: 1 : 9 : 3. 138. பெருமாள் திருமொழி; 1 : 1.1 : 2. 139. பெருமாள் திருமொழி: 3 : 2 : 1. 140. பெருமாள் திருமொழி; 4 : 6 : 1