பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/594

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

597

  • வாணாளும் மாமதி.போல் வெண்குடை.

ஐந்தாந் திருமொழி முற்றும் உவமையழகுக்குப் பெயர் .ோனது எனலாம். அரிய உவமைகள் அமைந்து உயர்ந்த பொருளினை நமக்கு உணர்த்துகின்றன. ஒவ்வோர் பாடலும் ஒர் உவமையினை உள்ளடக்கியுள்ளன. பெற்ற தாயானவள் மிக்க கோபங்கொண்டு அதனால் தனது குழந்தையை வெறுத்துத் தள்ளினாலும் பின்பும் அத்தாயினுடைய கருணையையே கருதி அழுகின்ற இளங் குழந்தையாகக் குலசேகரர் தமக்கு உவமை கூறுகின்றார்:

  • அரிசினத்தால் ஈன்றதாய் அகற்றிடினும் மற்றவள்தன்

அருள் கினைந்தே யழுங்குழவி யதுவேபோன் றிருந்தேனே. . கணவன், காண்பார் அனைவரும் இகழத்தக்க செயல் களையே செய்தாலும் தன்னை மணஞ்செய்து கொண்ட கணவனையன்றி வேறு ஒர் ஆண்மகனையும் நினைக்கவுஞ் செய்யாத உயர்குலத்துப் பிறந்த கற்புடை மகள்போலக் குலசேகரர் திருமாலோடு தம்மைத் தொடர்பு படுத்திக் கொள்கிறார்: கண்டார் இகழ்வனவே காதலன்தாய் செய்திடினும் கொண்டானை யல்லால் அறியாக் குலமகள் போல். 145 குடிமக்களைக் காக்கவேண்டிய அரசன் அவர்களைப் பாதுகாக்காமற் போய் மாறாக எப்படிப்பட்ட துன்பங் களைச் செய்தாலும் அவனுடைய செங்கோலையே எதிர் பார்த்து வாழ்கிற குடிமக்கள் போன்றிருந்தேன் என்கிறார் ஆழ்வார். தான்நோக்காது எத்துயரஞ் செய்திடினும் தார்வேந்தன் கோல்நோக்கி வாழுங் குடிபோன் றிருந்தேனே. 141. பெருமாள் திருமொழி; 4 : 7 : 1. 142. பெருமாள் திருமொழி; 5 : 1 : 143. பெருமாள் திருமொழி; 5 ; 2 : 144. பெருமாள் திருமொழி; 5 : 3 : 3–4. 1-2. 3-4.