பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/595

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

599

எத்தனையும் வான்மறந்த காலத்தும் பைங்கூழ்கள்

மைத்தெழுந்த மாமுகிலே பார்த்திருக்கும். ' நீர் திரண்டுவரும் ஆறுகளெல்லாம் கண்டவிடமெங்கும் பரவியோடி முடிவில் ஆழ்ந்த கடலிலே சென்று சேர்தலல்லது மற்றோரிடத்தே புகுந்து நிற்க மாட்டா: அதுபோல் நாராயணனையே சரண் புகுகிறார் ஆழ்வார்:

தொக்கிலங்கி யாறெல்லாம் பரந்தோடித் தொடுகடலே

புக்கன்றிப் புறகிற்க மாட்டாத, ' உன்னையே (நாராயணனையே) மிக விரும்பி, மிக்க செல்வத்தை விரும்பாதவனையே தானாக வந்து செல்வம் சேர விரும்பும். அதுபோல் நின்னையே நான் வேண்டுவன்; நீள் செல்வத்தை வேண்டேன் என்கிறார் ஆழ்வார்:

நின்னையே தான்வேண்டி நீள்செல்வம் வேண்டாதான்

தன்னையே தான்வேண்டுஞ் செல்வம் போல்.'" யானையின் நடைக்கு எம்பெருமான் தன் நடையும், தாமரைக்கு முகமும் உவமையாகக் கூறப்பட்டுள்ளன:

  • கைம்மாவின் நடையன்ன மென்னடையும்

கமலம்போல் முகமும். ' ஆக இவ்வாறு பெருமாள் திருமொழியில் உவமை நலங் காணும்போது ஐந்தாம் திருமொழியின் ஒவ்வொரு பாடலும் பரமாத்மா ஜீவாத்மா முறை, நாயகன் நாயகி பாவம் ஆகிய இவ்வொன்றன் கூறாக அமைந்து அழகூட்டு கின்றன எனலாம். பிறவிடங்களில் எளிய உவமைகளே இடம் பெற்றிருக்கக் காணலாம். பிறவிடங்களில் வண்ண, வடிவு உவமைகள் அமைந்திருக்க, ஐந்தாந் திருமொழி வினையுவமை கொண்டிலங்குகின்றது. 148. பெருமாள் திருமொழி; 5 : 7 : 1-2. 149. பெருமாள் திருமொழி; 5 : 8 : 1-2. 150. பெருமாள் திருமொழி; 5 : 9 : 1-2. 151. பெருமாள் திருமொழி; 9 : 6 : 3.