பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/596

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

XI. குலசேகரர் அரச செல்வம் வேண்டாமை எண்ணி நிரம்பாத செல்வத்தினையும், தேவமாதர்கள் சூழ இருக்க வானுலகு ஆளும் செல்வத்தினையும் மண்ணுலகை ஆளும் செல்வத்தினையும் யான் விரும்ப வில்லை. ஆனாத செல்வத் தரம்பையர்கள் தற்குழ வானாளும் செல்வமும் மண்ணரசும் யான்வேண் டேன். 52 'நடுக்கஞ் செய்யும் கட்டுத்தறியிற் கட்டப்பட்டுள்ள அரச யானையின் பிடரியில் வீறறிருந்து இன்பம் பொருந்திய அரச செல்வமும், அரச பாரமும் யான் வேண்டேன், ! " கம்பமத யானைக் கழுத்தகத்தின் மேலிருந்து இன்பமருஞ் செல்வமும் இவ்வரசும் யான் வேண் டேன். 8 வெண்கொற்றக் குடையினையுடைய மன்னவர் களுக்கு அரசனாக வீற்றிருந்து மகிழ்வுறும் செல்வத்தினை யான் விரும்பவில்லை.

  • வாணாளும் மாமதி.போல் வெண்குடைக்கீழ் மன்னவர்தம் கோனாகி வீற்றிருந்து கொண்டாடும் செல்வறியேன்.

தேவர் உலகத்தினை எல்லாம் ஒரு கொற்றக்குடை யின் நிழலிலே அரசாண்டு ஊர்வசியினை அடையப் பெறினும் அச்செல்வத்தை யான் விரும்பமாட்டேன்." " உம்பர் உலகாண் டொருகுடைக்கீழ் உருப்பசிதன் அம்பொற் கலையல்குல் பெற்றாலும் ஆதரியேன்.” 152. பெருமாள் திருமொழி; 4 : 2 : 1.2. 153. பெருமாள் திருமொழி; 4 ; 5 : 1.2. 154. பெருமாள் திருமொழி; 4 : 7 : 1.2. 155. பெருமாள் திருமொழி; 4 : 10 : 1.2.