பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/597

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

601

  • தில்லைத் திருச்சித்ர கூடத்தில் திருமகளோ டினிதமர்ந்த செல்வன் அடியினைகளைத் தொழுதுவழுத்து கின்ற அரசினையல்லாமல் வேறு அரச செல்வத்தினை யான்

ஒரு பொருட்டாக மதியேன்.

  • திருமகளோ டினிதமர்ந்த செல்வன் றன்னைத்

தில்லை நகர்த் திருச்சித்ர கூடங் தன்னுள் அரசமர்ந்தா னடிசூடு மரசை யல்லால் அரசாக எண்ணேன்மற் றரசுதானே. ே இவ்வாறு பெரிய நிலப்பரப்பினையாளும் அரசாயிருந் தாலும், அச்செல்வத்தைச் சிறிதும் மதியாத - அடியவர் கூட்டுறவை விரும்பும் அடியார்க்கடியவராகக் குலசேகரர் விளங்குகிறார். XII. அடியவர் கூட்டுறவினைப் பெரிதும் விரும்புதல் 'எல்லாம் பெற்றுப் பெருவாழ்வு வாழ்கின்ற அரசர்க் கரசன் அவற்றைத் துறந்து அடியாருக்கடியனாய் ஆண்டவனை வேண்டுதல் அருமையினும் அருமை. அவ் வருமை இவருக்கு எளிதாயிற்று. கடவுளைத் தொழுதல் ஒரு பெரிதல்ல; அடியவரிடத்தும் அன்பு கொண்டொழுக வேண்டும் என்று முதன்முதல் வற்புறுத்தியவர் இவரே யாவர் என்று உரைப்பர் அறிஞர். குலசேகார் தம் பாடல்கள் பலவற்றில் அடியவர்களைச் சிறப்பித்தும் அவர்தம் கூட்டுறவினையே பெரிதும் விரும்பி யும் பாடியுள்ளார். 'திருவரங்கத்தில் அரவணை மீது அழகாகப் பள்ளி கொண்டிருக்கும் அரங்கநாதப்பெருமானின் திருவடியின் கீழ் 156. பெருமாள் திருமொழி: 10 : 7 : 3–4. 157. திரு. தெ. பொ. மீனாட்சிசுந்தரம் பிள்ளை; குலசேகரர், ப. 12, 13.