பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/598

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

602 மலர்களைத் தூவி, ஆங்குள்ள அடியவர் திருக்கூட்டத்தை அணுகி வாழும் நாள் எந்நாளோ என்கிறார் ஆழ்வார்: அணியரங்கத் தரவணையிற் பள்ளி கொள்ளும் அம்மான்ற னடியிணைக்கீ ழலர்க ளிட்டங்கு அடியவரோ டென்றுகொலோ அ. தி கும் poss (36ss. * * * * * அடித் தொண்டர்கள் அகமகிழ்ந்து வாழ அன்போடு இலங்கையிருக்கும் தென்திசை நோக்கிப் பள்ளி கொண் டிருக்கும் திருவரங்கத்தம் மானின் திருமுற்றத்து அடியார் தங்கள் இன்பமிகும் பெருங்கூட்டத்தினைக் கண்டு யானும் அக்குழுவிலுள் ஒருவனாய் வீற்றிருக்கும் நாள் எந்நாளோ" என்கிறார் ஆழ்வார்.

    • ... ... ... அகமகிழுந் தொண்டர் வாழ அன்பொடுதென் றிசைநோக்கிப் பள்ளிகொள்ளும்

அணியரங்கன் றிருமுற்றத் தடியார்தங்கள் இன்பமிகு பெருங்குழுவு கண்டுயானும் - இசைந்துடனே யென்றுகொலோ இருக்கும் прrr(36ії т. *** 5 * இரண்டாந் திருமொழி முற்றும் அரங்கத்தம்மான் மெய்யடியார்பால் குலசேகரர் கொண்ட அளவற்ற பக்திப் பெருக்கை வெளியிடுவதாகும்.

திருவரங்கத்தில் திருவாழும் பெரிய பிராட்டியோடு வாழும் வனமாலை யணிந்த மார்பனை வாழ்த்தி அன்பு கொண்ட மனத்தராய் ஆடிப்பாடி இறைவன் திருப்பெயர் களை வாய்விட்டுக் கதறிக் கூப்பிட்டு இளைப்படைகின்ற உண்மையான அன்பு நிறைந்த அடியார்கள் கூட்டத்தைக் கண்டு வணங்கப் பெற்றால் அதுவே யான் கண் படைத்த தற்குப் பயன் ஆகும் என்கிறார் குலசேகரர்.

158. பெருமாள் திருமொழி; 1 : 3 : 3-4. 159. பெருமாள் திருமொழி; 1 : 10 : 2.4.