பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/600

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

604

அரங்கனுக்கு அடியார்களாய் நாவானது தடிக்கும்படி சநாரணா என்றழைத்து, மேனி காய்ப்பேற வணங்கித் தோத்திரம் செய்து மகிழ்வடைகின்ற அடியவர்களுடைய திருவடிகளை என் மனம் துதித்து அவர்களுக்குப் பல்லாண்டு பாடும்.
  • அரங்க னுக்கடி யார் களாய் நாத்த ழும்பெழ நார ணாவென்

றழைத்து மெய்தழும் பத்தொழு தேத்தி யின்புறுங் தொண்டர் சேவடி ஏத்தி வாழ்த்துமென் நெஞ்சமே.' :அரங்கத் தம்மானைத் தங்கள் மனத்தில் நிலைத்து விளங்கப் பெற்ற மயிர்க்கூச்செறியும் மேனியுடைய அடியவர்களையே என் நெஞ்சானது எப்போதும் நினைந்து மயிர்க்கூச் செறியப் பெற்றது.' ' மெய்சி லைக்கரு மேக மொன்று தங் நெஞ்சுள் நின்று திகழப்போய் மெய்சி லிர்ப்பவர் தம்மை யேநினைங் தென்ம னம்மெய் சிலிர்க்குமே. *குற்றமற்ற நல்வழிகளை வாழக் காட்டும் அரங்கநா தன்மாட்டே பக்தி பூண்டிருக்கிற அடியவர்.பால் எம் மனமானது எந்தப் பிற வியிலும் அன்பு பூண்டிருக்கும்' என்கிறார் ஆழ்வார்:

  • தீதில் நன்னெறி காட்டி யெங்குங் திரிந்த ரங்கனெம் மானுக்கே காதல் செய்தொண்டர்க் கெப்பி றப்பினுங்

காதல் செய்யுமென் நெஞ்சமே.' * அரங்கநாதனாகிற அரிய பெருமை வாய்ந்ததொரு சுடரினைக் கிட்டித் துய்க்க வேண்டுமென்கிற நெஞ் 163. பெருமாள் திருமொழி; 2: 4: 2.4. 164. பெருமாள் திருமொழி; 2 : 5 : 3-4 165. பெருமாள் திருமொழி; 2 : 6: 3-4 _