பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/601

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

605 சுடையராய், அங்ங்னமே சேர்ந்து பக்திப் பரவசத்தாலே கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணிர் வெள்ளமிட்டொழுகும் படி நிற்கும் அடியவர்களுடைய இரண்டு திருவடிகளில் என். மனமானது ஒப்பற்ற அன்பை உடைத் தாயிருக்கும்.' ' ஆர மார்பன் அரங்க னென்னும் அரும்பெ ருஞ்சுட ரொன்றினைச் சேரும் நெஞ்சின ராகிச் சேர்ந்து கசிந்தி ழிந்த கண் ணிர்களால் வார நிற்பவர் தாளி ணைக்கொரு வார மாகுமென் நெஞ்சமே. வண்டுகள் தேனுண்ணும் மலர் மாலைகளையணிந்தவனும், மலைபோற் பெருமை தங்கிய திருமார்பையுடைய வனும் செந்தாமரை மலர் போன்ற திருக்கண்களை யுடையவனுமான அரங்கநாதன்மாட்டுப் பெருங்காதல் கொண்டு எழுந்து கூத்தாடி வாயாரப் பாடித் திருத் தலங்கள் தோறும் தி ரி ந் து அரங்கனெம்மானுக்கே பித்தேறித் திரிகின்ற தொண்டர்தம் பெருவாழ்விற்கு என் மனம் மயங்கிக் கிடக்கின்றது' என்கின்றார் குலசேகரர். : ......... வண்டு கிண்டு நறுந்துதாய் மாலை யுற்ற வரைப் பெருந்திரு மார்ப னைமலர்க் கண்ணனை மாலை யுற்றெழுந் தாடிப் பாடித் திரிந்த ரங்கனெம் மானுக்கே மாலை யுற்றிடுங் தொண்டர் வாழ்வுக்கு மாலை யுற்றதென் நெஞ்சமே. 87

கண்களில் இடைவிடாது மகிழ்ச்சிக் கண்ணிர் சொரியவும், உடல் மயிர்க்கூச்செறியவும், நெஞ்சு

தளர்ந்து களைத்துப்போய் நிலைதளர்ந்து, கும்பிட்டுக் கூத்துமாடி, நின்றவிடத்து நில்லாமல் பலவகை ஆட்டங் 166. பெருமாள் திருமொழி; 2. 7: 2-4. - 167. பெருமாள் திருமொழி; 2: 8.