பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/602

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

606 களை ஆடிப் பாட்டுக்களைப் பாடி வணங்கி அரங்க நாதனுக்கு அடியவர்களாய் அவன் பால் பித்தேறித் திரிகிறவர்கள் பைத்தியக்காரர்கள் அல்லர்; அவர்களைப் பைத்தியக்காரர்கள் என்று நினைக்கும் மற்றப் பேர்கள் தாம் பைத்தியக்காரர்கள்' என்கிறார் குலசேகராழ்வார். மொய்த்துக் கண்பனி சோர மெய்கள் சிலிர்ப்ப வேங்கியி ளைத்துகின் றெய்த்துக் கும்பிடு கட்ட மிட்டெழுங் தாடிப் பாடி யிறைஞ்சியென் அத்தன் அச்சன் அரங்க னுக்கடி யார்க ளாகி யவனுக்கே பித்த ராமவர் பித்த ரல்லர்கள் மற்றை யார்முற்றும் பித்தரே.”* இரண்டாந் திருமொழியின் இறுதிப் பாடல், அரங்க நாதனுடைய உண்மையான அடியார்களுடைய எல்லை யற்ற அடிமைத்திறத்தினில் எப்போதும் பொருந்திய திருவுள்ளத்தை யுடையவரும் கொல்லிநகர்க் கரசரும் மதுரைக் கரசரும் உறையூருக் கரசருமான குலசேகரர்" என்ற குறிப்பினைக் கொண்டுள்ளது: அல்லி மாமலர் மங்கை நாதன் அரங்கன் மெய்யடி யார்கள்தம் எல்லை யில்லடி மைத்தி றத்தினில் என்று மேவு மனத்தனாம் கொல்லி காவலன் கூடல் நாயகன் கோழிக் கோன் குல சேகரன். இப் பகுதி கொண்டு குலசேகராழ்வார் அரங்கனின் அடியார் மாட்டுக் கொண்டிருந்த அளவற்ற அன்பினை அறியலாம். 168. பெருமாள் திருமொழி; 2: 9. 169. பெருமாள் திருமொழி; 2 : 10 : 1 2