பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/603

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

XIII. 916,1603; &#60 Gu (Element of pathos) ஏழாந் திருமொழி, கண்ணபிரானது பிள்ளைத் திரு விளையாடல்களைக் கண்டு களிக்கும் பேறு யசோதைப் பிராட்டிக்கு வாய்த்ததுபோலத் தனக்கு வாய்க்காமையை நினைந்து, பெற்ற தாயான தேவகிப் பிராட்டியார் அப் பெருமானைக் கம்ச வதத்திற்குப் பின்னர்க் கண்டபோது புலம்பியவற்றைக் கொண்டு மொழியும் திருப்பாசுரங்களைக் கொண்டதாகும். ஒன்பதாந் திருமொழியின்கண் அ ைம ந் து ஸ் ள பாடல்கள், இராமனது இளமைச் செயல்களைக் காணும் பேறு தனக்கு வாய்க்காமையை நினைந்து, தன் மூத்த திருக்குமரன் கற்பின் கனலி மிதிலைச் செல்வியோடும் ஆரா அன்பின் இளவலோடும் காடு நோக்கிச் சென்ற பிரிவாற்றாமையினை நினைந்து தசரத சக்கரவர்த்தி புலம்பியவாற்றினைக் கொண்டு மொழிவனவாகும். இவை முன்னரே கிளத்தப்பட்டன. எனவே ஈண்டு விவரிக்கப் பெறவில்லை. இவ்விரு திருமொழிப் பாடல்களிலும் அவலச் சுவை நிரம்பியுள்ளதனைக் காணலாம். XIV. பிள்ளைத் தமிழ் பிள்ளைத் தமிழ் என்ற பெயரில்லாவிடினும் முதன் முதல் பெரியாழ்வார் கண்ணனைக் குழந்தையாக எண்ணி அவன் பிள்ளைமைத் திருவிளையாடல்களை நயம்படப் புனைந்து பாடியது பிள்ளைத் தமிழ் எனப் பிற்காலத்தே பெரிதாகச் சிறக்க வளர்ந்த துறைக்குத் தோற்றுவாய் செய்தது என்பர். இங்குக் கு ல ேச க ர ர் ஏழாந் திருமொழியில் கண்ணபிரான் பிள்ளைப் பருவத்தில் நிகழ்த்திய திருவிளை