பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/604

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

608 யாடல்களையும், குழந்தையாக அவன் தொட்டிலில் பாங்குறக் கிடந்த அழகு மாட்சியினையும் சுவைபடப் புனைந்துள்ளார். தேவகி புலம்பலில் பிள்ளைத் தமிழ்ப் போக்குக் காணப்படுவதனை அறியலாம். எட்டாந் திருமொழிப் பாடல்கள் இராமனுடைய பிள்ளைப் பருவ நிகழ்ச்சிகளையும் மற்ற வீரச் செயல்களை யும் நற்றாயான கோசலைப் பெருமாட்டி பெற்ற ேப ற் றி ைன எண்ணி, இராமபிரானது இளமைப் பருவத்தைத் தாலாட்டு முகத்தாற் கொண்டாடும் வகையில் ஏற்றமுற அமைந்துள்ளன. இதுகாறும் கூறியவற்றால் குலசேகரர் இயற்றிய பெருமாள் திருமொழியின் சிறப்பு, அழகு மாட்சி, உவமை நலன், கவிதைப் பண்பு, பிள்ளைத் தமிழ்ப் போக்கு, அவலச் சுவை, வருணனைத் திறம், இராமாவதார நிகழ்ச்சிகள், கிருட்டினாவதார நிகழ்ச்சிகள், அடியவர் அன்பின் திறம், திருமாலிடத்துக் குலசேகரர் கொண்ட கரையிலாப் பத்தி முதலியனவற்றினை இனிதுறக் கண்டோம்.