பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/605

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ இலக்கியம் 1. பொன் வண்ணத் தந்தாதி தமிழ்மொழியில் பிற்காலத் தெழுந்த நூல்கள் பல்வேறு வகைப்படுவனவாகும். தனிச் செய்யுட்களும், காவியங்களும் தமிழ்மொழியில் எழுந்த பின்னர்ச் சிறு பிரபந்தங்கள் என வழங்கும் சொற்றொடர் நிலைச் செய்யுட்கள் எழுந்தன. இப் பிரபந்தங்களைத் தொண் ணுாற்றாறு வகைப்படுத்திக் கூறுவர். இவைகளைச் சின் னுரல்கள் எனக் கூறும் மரபும் உண்டு. பந்தம்’ என்ற வடசொல் தமிழில் நன்கு கட்டுதல் என்னும் பொருளைத் தரும். யாப்பால் நன்கு கட்டப்பட்ட நூல்கள் இவை களாதலின் இவை இப் பெயர் பெற்றன. இவற்றுள் சிறந்தனவாக இன்றளவும் பு ல வ ர் பெருமக்களால் போற்றப் பெறுவன கோவை, உலா, அந்தாதி, பரணி, து.ாது, கலம்பகம், பிள்ளைத் தமிழ் முதலியனவாகும். இவைகள் சிறு பிரபந்தங்கள் எனினும் சிற்சில நூல்கள் நல்ல கவிச்சுவை நிறைந்து ஒளிர்கின்றன. அந்தாதி இலக்கியம் ஈண்டு அந்தாதி இலக்கியம் குறித்து முதற்கண் ஆராய் வோம். அந்தாதி என்னும் தொடர் அந்தம்', "ஆதி" என்னும் இரு வடசொற்களாலாகியது. அந்தம்' என்றால் இறுதி; ஆதி என்றால் முதல். ஒரு செய்யுளின் இறுதி எழுத்தோ, அசையோ, சீரோ, அடியோ அடுத்த செய்யுளின் சே. செ. இ-39