பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/606

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

610 தொடக்கமாக வருவது அந்தாதி ஆகும். ஒரு செய்யுளின் முடிவே அடுத்த செய்யுளின் முதலாக அமைவதால் இப் பாவகை அந்தாதி எனப்பட்டது. முடிவில் முதல், அந்தத்தில் ஆதி என்றும், இப் பாவகையினை நினைவு கொள்வர். முடிவில் முதல், அந்தத்தில் ஆதி என்ற மெய்யுணர்வின் நுட்பத்தை நோக்கும்போது அதிலிருந்து அந்தாதித் தொடையமைப்புத் தோன்றி வளர்ந்திருக்க லாம் என அறியலாம்' என்பர் தமிழறிஞர். இதற்குச் சான்றாகச் சிவஞான போத முதல் நூற்பாவினைக் காட்டுவர். அது வருமாறு:

  • அவன் அவள் அதுவெனும் அவைமூ வினைமையின்

தோற்றிய தி தியே ஒடுங்கிமலத் துளதாம் அந்தம் ஆதி என்மனார் புலவர்.' இந் நூற்பாவில் காணும் ஈற்றடியின் பொருளை அதற்கு (உலகத் தொகுதி) ஒடுக்கமாய் முடிவைச் செய்யும் அந்தமாகிய கடவுளே ஆதியுமாகின்றான், எனத் தருக்க நூலறிந்தோர் கூறுவர் எனக் கூறுவர் அறிஞர் கா. சு. பிள்ளை அவர்கள். செய்யுட்களை மனப்பாடம் செய்யவும், மறவாது நினைவில் நிறுத்தவும் அச் செய்யுளின் எதுகை, மோனை முதலிய தொடை வகைகள் உதவுவனவாகும். அதிலும் அந்தாதி அமைப்பு-ஒரு செய்யுளின் இறுதியில் நிற்கும் எழுத்தோ, அசையோ, சீ .ே ரா, அடியோ அடுத் த செய்யுட்கு முதலாக அமைவதாக உளதாதலின் எளிதாக நினைவில் நிற்கக் கூடியதாகவுளது. ஆயினும் தொல் காப்பியனார் அந்தாதி இலக்கணம் பற்றிய குறிப் பொன்றையும் நமக்குத் தரவில்லை. மோனை, எதுகை, முரண், இயைபு முதலிய தொடை வகைகளைச் சுட்டி, அளபெடைத் தொடையினை ஐந்தாவதாகக் காட்-டி, மேலும் பொழிப்பு, ஒரூஉ, செந்தொடை முதலியன 1. சிவஞானபோதம்; நூற்பா : 1.