பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/607

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

611 வற்றைக் கூறிப் போந்தனர். மேலும் அவர் நிரனிறுத் தமைதலையும், இரட்டை யாப்பினையும் குறிப்பிட் டுள்ளமையைக் கண்ணுறும்போது தொடை வகைகளைப் பத்தாகக் கண்டார் தொன்னுாலாசிரியராம் தொல் காப்பியனார் எ ன் பது தெற்றென விளங்குகின்றது. தொல்காப்பியனார் வெளிப்படையாக அந்தாதித்தொடை பற்றிக் குறிப்பிடவில்லை என்றாலும் ஒத்தாழிசையும் மண்டில யாப்பும்' எனத் தொடங்கும் நூற்பாவில் முதலையும் முடிவையும், இயைத்துக் காணும் நோக்கு அமைந்திருக்கக் காணலாம். மேலும் தொல்காப்பியனார் காலப்போக்கில் பிற்காலத்தில் புதிய பாவகைகளையும் படைத்துக் கொள்ளலாம் என்று நமக்கு உரிமை வழங்கி யுள்ளார் என்பதனை, விருந்து தானே புதுவது கிளந்த யாப்பின் மேற்றே என்ற நூற்பாவினைக் கொண்டு அறியலாம். இந் நூற்பா விற்கு உரை கண்ட பேராசிரியர், புதுவது கிளந்த யாப்பின் மேற்றே என்றது என்னையெனில் புதிதாகத் தாம் வேண்டியவாற்றான் பல செய்யுளும் தொடர்ந்து வரச் செய்வது. அது முத்தொள்ளாயிரமும் பொய்கை யார் முதலாயினோர் செய்த அந்தாதிச் செய்யுளும் என உணர்க, கலம்பகம் முதலாயினவும் சொல்லுப என்று குறிப்பிட்டுள்ளார்.” பிற்காலத்தில் நாம் காணும் அந்தாதி நூல்கள் போன்று தனிப்பட்ட நூல்களைச் சங்க காலத்திலும் அதை அடுத்த காலத்திலும் காண இயலாவிடினும், அந்தாதி அமைப்புப் பெற்று வரும் பாடல்கள் சிலவற்றைச் சங்க 2. தொல்காப்பியம்; பொருளதிகாரம்; செய்யுளியல்; நூற்பா : 237. 3. தொல்காப்பியம்; பொருளதிகாரம், செய்யுளியல்; நூற்பா : 237 பேராசிரியர் உரை.