பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/610

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

614 விருத்தம், கட்டளைக் கலித்துறை முதலியன செல்வாக்குப் பெறலாயின. மேலும் இவ் அமைப்புகள் பெருகவும் யமகம், திரிபு, சிலேடை, நீரோட்டகம், பதிற்றுப்பத்து முதலியன தோன்றின. இவையன்றியும் பாட்டியல் நூல் கள் குறிப்பிடும் ஒலி அந்தாதி, கலி அந்தாதி, அந்தாதித் தொகை முதலியனவும், இணைமனிை மாலை, இரட்டை மணிமாலை, மும்மணிமாலை, மும்மணிக் கோவை, நான் மணிமாலை, நான் மணிக்கோவை, நவம ணிமாலை, நவ ம ணிக்கோவை முதலியனவும் அந்தாதி வகையைச் சார்ந்தனவேயாகும். இனிப் பாட்டியல் நூல்கள் அந்தாதியின் இலக்கண மாகக் கூறும் கருத்துக்களை காண்போம். செய்யு ளந்தாதி சொற்றொடர் நிலையே' என்று தண்டியலங்காரம் குறிப்பிடுகின்றது. அந்தாதிப்பது அந்தாதி மடக்கே என்று கூறுகின்றது மாறனலங்காரம். அந்த முதலாத் தொடுப்பது அந்தாதி என்று யாப்பருங் கலக்காரிகை கூறுகின்றது. இத்தொடருக்கு உரையாசிரியர் அடிதோறும் இறுதிக்கண் ணின்ற எழுத்தானும், அசை யானும், சீரானும், அடியானும், மற்றை அடிக்கு ஆதியாகத் தொடுப்பது அந்தாதித்தொடை என்று உரையெழுதி யுள்ளார். யாப்பருங்கலம்,

  • ஈறு முதலாத் தொடுப்பங் தாதியென்

றோ தினர் மாதோ உணர்ந்தி சினோரே' என்று குறிப்பிடுகின்றது. அடியும் சீரும் அசையும் எழுத்தும் முடிவு முதலாச் செய்யுள் மொழியின.து அந்தாதித் தொடையென் றறைதல் வேண்டும்' என்பர் நத்தத்தனார். வீர சோழியத்தில் அந்தாதி பற்றிய குறிப்பு இல்லை. எளிமையும் இனிமையும், நடைநலமும் தொடை நலமும் கொண்டு தொடக்க காலத்தில் இலக்கிய இன்பம்