பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/612

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

617 கொண்டே நூலின் பெயரும் அமைந்துள்ளது. ஆத்திசூடி, கொன்றை வேய்ந்தோன் முதலான நூல்களும் நூன்முதற் றொடராலேயே பெயர் பெற்றுள்ளமையைக் காணலாம். மேலும் பொன் என்பது மங்கல மொழியாதலின் நூலின் தொடக்கமாயிற்று. இனி நூற்கண் நுழைந்து நயங் காண்போம். மெய்யுணர்ந்த அடியாரது உள்ளங்களில் அவர் நினைத்த வடிவோடு விரைந்து சேர்கின்றான் இறைவன் என்ற கருத்து முதற் பாட்டால் பெறப்படுகின்றது. வண்ணம் என்ற சொல் இப்பாட்டில் பன்னிரண்டு முறை வந்துள்ளது. சிவபிரான் பொன்வண்ண மேனியினையும், மின்னல் போன்ற ஒளி மயமான சடையினையும், வெள்ளிக் குன்ற மன்ன பெரிய இடபவாகனத்தையும் உடையவனாக விளங்குகின்றான் என்று சேரமான் பெருமாள் நாயனார் சிந்தையில் இறையன்பு பெருக உள்ளம் உருகிக் குறிப் பிட்டுள்ளார். 10 கனா நிலையுரைத்தல் என்னும் துறையின்பாற் பட்டது இரண்டாவது பாட்டு. பிட்சாடனரான சிவபெரு மானைக் காணும் விருப்புடன் உணவாகிய பலியைக் கொண்டு வெளிச் செல்ல இவள் துணிந்தது என்னே! பேய னொருவனைக் காமுறும் பித்துப் பிடித்தவள் போலும் இவள் என்று தாய் கூறித் தலைவியை வீட்டின் உள்ளே இழுக்கவும், தலைவி தளர்ந்த நிலையில் நின்றபோது: சிவபெருமான் தலைவியைத் தழுவிக் கொள்வதற்கு வருமாறு அழைத்தான். இந்நிலையில் தலைவியின் கண்கள் இமை திறந்துவிட்டன. தலைவி கண்ட கனா நிகழ்ச்சி இவ்விரண்டாம் பாடலில் நன்கு சித்திரிக்கப் பட்டுள்ளது. - 10. பொன்வண்ணத் தந்தாதி; 1. 11. 5 : 2.