பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/613

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

618 பர்மனின் கொன்றையந்தார் வேண்டிப் பேதுறும் பெண்ணின் காதல் உணர்ச்சியை மூன்றாம் பாட்டு சுட்டு கின்றது. கண்கள் நீரைச் சொரிய, கைவளைகள் நெகிழ்ந்தோட, அரையுடையும் நழுவ, கண்களாற் பொலிந்த நெற்றி வேர்க்க, கொன்றை மாலை போலும் சுணங்கழகுடைய பெண் உருகத் தலைவியின் வருத்த நிலைமை புலப்பட்டதனை இப்பாடல் கவிநயம் சொட்ட உரைக்கின்றது.12 நான்காவது பாடலில் நகைச்சுவை இழையோடு கின்றது. அயல்வீடுகளில் பலியாக உணவுகளை ஆராய்ந்து பெற்றும், பரமன் உண்டது நஞ்சாகும். உலகத்தைப் படைக்கும் தொழிலை நடாத்தும் பிரமனது சிரத்தை அருளினின்றிக் கொய்தும் அவன் பிறர்க்குக் கொடுப்பது பேரருளாகும். காமத்தை ஊட்டும் அவனை அனங்கனாக எரித்தும் தன்மேனியுடன் இடப்பாற் கொண்டது மாதாகும். தான் வசிப்பதற்குச் சிறந்த மனையாகக் கொண்டது ஆல், மா பலாப் போன்ற மரக்கிளைகளே யாகும். 3

  • உலகின் இயக்கத்திற்குக் காரணமானவன் சிவ பெருமானே என்ற தத்துவத்தை உணர்ந்தோர் சிவலோகத் தையும், அவன் பகர வொண்னாப் பண்பினையும் புகழினையும் சொல்வோர் மண்ணுலகினையும் பெறுவர்' " என்று ஐந்தாம் பாடல் குறிப்பிடுகின்றது. *

ஆறாவது பாடலில் சங்கர நாராயணக் கோலத்தின் வருணனை இடம் பெற்றுள்ளது. இடப்பக்கம் திருமால்; வலப்பாகம் தான்; இடப்பால் துழாய் மாலை; வலப்பால் கொன்றைமாலை; இடப்பக்கம் பொற்றுகில்; வலப் பக்கம் 12. பொன்வண்ணத்தந்தாதி, 3. 13. > * 4. 14. 5 ל ת.