பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/614

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

619 புலித்தோல், இடப்பால் சக்கரம்; வலப்பால் மான்; இடப்பால் விளங்கும் திருமால் நிறம் கருப்பு, வலப்பால் விளங்கும் இவன் நிறம் செம்மை. அத்திருமால் கூத்து நிகழ்ந்த இடப்பக்கம் கொண்டது குடம்; தில்லைக் கூத்தனான இவன் வலப்பக்கங் கொண்டது கூத்தில் முழக்கும் கொக்கரை. . இவ்வுருவ வருணனை வண்ணை முரண் (Colour Contrast) முதலான அமைந்து நயம்பட உள்ளது. இறைவன் ஆடித்திரிவது நாடகம் என்றும், பலியாகத் தேர்ந்து கொள்வது தாருகாவனத்து மகளிரின் கைவளை களாகிய உணவு என்றும், இவர் மேனி பவள நிறம் என்றும், இவர் பெரிதும் உகப்பது இமையவர்தம் துதி என்றும், இவர் அருளிச் செய்தது வேதங்கள் என்றும் ஏழாம் பாடல் ஏற்றமுற எடுத்தியம்புகின்றது. பத்தாவது பாடலில் நல்ல கருத்து அடங்கியுள்ளது. துணையற்ற தனி நெஞ்சமே ! ஈசனது திருவடித் தாமரை களைப் பணிவாயாக; அவனது புகழைப்பாடுவாயாக; இசையுடன் கூடி அவனைத் துதித்துக் கூத்தாடுவாயாக; மலரால் அவனை அணிவிப்பாயாக! தவமூர்த்தியான அவனுக்கே அடிமை செய்வாயாக; தோலுடன் கூடிய உடலில் திருநீற்றைப் பூசி நற்பதவியே விரும்புக; நல்லன. நிறைந்த சிவலோகத்தை அவனே உனக்குக் காட்டுவன்; எனவே துன்பத்தை ஒழிப்பாயாக என்று தலைவி தன் நெஞ்சிற்குத் தானே கூறிக் கொண்டாள். பணிபதம் பாடிசை ஆடி சை யாகப் பணிமலரால் அணிபதங் கன்பற் கொளப்பனை அத்தவற் கே அடிமை SSMSSSMSSSMSSSMSSSMSSSMSSSMSSSMSSSMSSS ----- 15. பொன்வண்னத்தந்தாதி , 6. 16. 7 ג כ.