பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/615

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

620 துணிபதங் காமுறு தோலொடு நீறுடல் துார்த்து நல்ல தணிபதங் காட்டிடுஞ் சஞ்சலம் நீ என் தனிநெஞ் சமே.' =நெஞ்சம் தளிர்விட, கண்ணிர் ததும்ப, முகம் மலர, கைகள் கூம்ப, தலை, இரு கைகள், இரு செவிகள், இரு தோள்கள், மேவாய் என்னும் எட்டுறுப்பும் நிலத்துப் பதிய வணங்கினால் வானுலகை நமக்கு உரிமையாகும்படி அமைப்பான் என்று பதினோராவது பாடல் கிளத்து கின்றது. I தேவராய் விளங்கத் துறக்கவின்பங்களை நுகர்வோர் சிவபிரானுக்கு அடியரானவராவர்; மக்கட் பிற வியெடுத்து இரந்துண்போர் சிவனடியார் அல்லாத தீயர் என்பதாம். இவ்வாறு பன்னிரண்டாவது பாடல் பகருகின்றது.' பதின்மூன்றாம் பாடல் பக்திச் சுவை நிறைந்த உருக்கமான உள்ளத்தினின்றும் பிறந்த பாடலாகும். பொய்ம்மையான சொற்களைச் சொல்லி, பாழான உடம்பைப் பேணி, பல வீடுகளிலும் சென்று தடுமாறாமல் நெஞ்சமே! நீ எழுவாயாக. கையில் அழலேந்தி ஆடுபவனும், கடலில் தோன்றிய நஞ்சை உண்டவனுமாகிய சிவபிரான் கழலைச் சார்ந்தால், இவ்வுலகில் நல்ல பயனைப் பெறலாம் என்று இப்பாடல் குறிப்பிடுகின்றது. படிறா யினசொல்லிப் பாழுட லோம்பிப் பலகடைச் சென் றிடறா தொழிது மெழுநெஞ்ச மேயெரி யாடியெம்மான் 17. பொன்வண்ணத்தந்தாதி; 10. 18. 5 : 11. 19. 5 12 כ.