பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/616

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

621 கடறா யினருஞ்ச முண்ட பிரான்கழல் சேர்தல்கண்டா யுடறா னுலிபய னாவசொன் னேனிவ் வுலகினுள்ளே .99 ஐம்புலன்களும் இராப்பகலாகச் சிறிது சிறிதாக வெட்டித் தின்பதனை எண்ணி உலக வாழ்க்கையை அருவருத்துவிட்டதாகப் பதினெட்டாவது பாடலில் ஆசிரியர் கூறுகிறார்.: சிவபிரானது பேருருவை வருணிப்பது அடுத்த பாடலாகும். 'பெருமானுக்குப் பூமி கால்களாம்; சூரிய சந்திர அக்கினிகள் கண்களாம்; காற்று உயிர்ப்பாம்; கடல் ஆடையாம்; வானம் முடியாம் ; விசும்பு உடம்பாம்; வேதம் முகமாம்; திசைகள் தோள்களாம்; பல வாய புகழ்மொழி களும் கீதமாம். இவ்வாறு பேருருக் கொண்டு பிறங்கும் இப்பெருமானிடம் காதல் கொண்டு இப்பூங்கொடி யனையாள் தன் அழகிய நிறத்தை இழப்பது என்ன மதி? : என்பது அப்பாடலின் கருத்தாகும். பாதம் புவனி சுடர்நய னம்புவ னம்.உயிர்ப்போங் கோதம் உடுக்கை உயர்வான் முடிவிசும் பேஉடம்பு வேதம் முகம் திசை தோள்மிகு பன்மொழி கீதம் என்ன போதம் இவற்கோர் மணிநிறங் தோற்பது பூங்கொடியே.”*

மூப்பும் பிணியும் கூற்றமும் வந்து கொண்டிருக் கின்றன; நாளும் நாளும் இவை புரியும் போராட்டத்தைத்

20. பொன்வண்ணத்தந்தாதி; 13. 21. 5 in 18. 22. 5 :) 19.