பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/617

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

622. தாங்கும் ஆற்றல் எனக்கில்லை. நின்பக்கலில் நிற்கும் பேற்றினை எனக்கு அருளுவாயாக’ என்று காதலாகிக் கசிந்து கண்ணிர் மல்கப் பாடுகிறார்.23 ஆன்மாவைத் தலைவியாகவும், ஆ த் த ர ா ன அடியாரைத் தோழியாகவும் கொண்டு அமைந்துள்ளது இருபத்திரண்டாம் பாடல். சிவானுபவத்தால் தான் பெற்ற பேரின்பத்தைத் தலைவி தோழிக்குக் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது. தத்துவ ஞானமாகிய பேரொளி என்பால் நிரம்பி நின்ற நிலையில், சிவபெருமான் என்னை நோக்கி இன்று முதல் இதுவே உனக்கு அமைந்த முறை என்றான். யானும் "இஃதே எனக்கு அழியாக் செல்வம்' என்றனன். அதன்மேல், நான் அவன் என்ற வேற்றுமை யுணர்வை அவ்வருட்பிரகாசம் முற்றிலும் ஒழித்து விட்டது. இதன் இயல்பினை நின்னொத்தார் அறிவார்களோ' என்று தலைவி தோழியிடம் வினவு கின்றாள். * அச் சிவானுபவத்தால் விளைந்த பயன்களை அடுத்த .பாட்டு (23) விளங்க உரைக்கின்றது:

  • ஒழித்தேன் பிறவியை ஊர்ந்தேன் உவகையை ஓங்கிற் றுள்ளம் இழித்தேன் உடம்பினை ஏலேன் பிறரிடை இம்மனையும் பழித்தேன் பழியே விளைக்கும்பஞ்

சேந்திரியக் குஞ்சரமும் தெழித்தேன் சிவன் அடி சேர்ந்தேன் இனி மிகத் தெள்ளியனே. நஞ்சை அயின்றவன் நீயாதலினால் புன்சொலாயினும் என் கவிகளையும் ஏற்றருளவேண்டும் என்ற கருத்தைக் கொண்டுள்ளது 25 ஆம் பாடல்: 23. பொன் வண்ணத் தந்தாதி; 21. 24. 5 : 22. 25. II - 22