பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/618

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

623

  • அருளால் வருகஞ்ச முண்டுகின் றாயை யமரர் குழாம் பொருளார் கவிசொல்ல யானும் புன்

சொற்கள் புணர்க்கலுற்றேன். 28 சிவபிரானுடைய தன்மையினை 26 ஆம் பாடல் வருணிக்கின்றது. சிவபிரானது திருமேனி கதிர்விரிகின்ற ஞாயிறு போலும் உளதாம். சடாபாரம் அஞ் ஞாயிற்றைச் சூழ்ந்தொளிரும் கிரனங்கள் போன்றும், நீலகண்டம் (கழுத்து) அச் சடையின் கதிரொளிக்கு ஆற்றாதோடிய காரிருள் போன்றும், திருமேனியில ரிைந்த திருநீறு அவ் விருளின் கீழ் இயலும் வெண்மேகம் போன்றும் விளங்குவ தாக ஆசிரியர் குறித்துள்ளார்.27 இப்பாடலுடன் காரைக்காலம்மை யாரின் அற்புதத் திருவந்தாதிப் பாடல் ஒன்றனை ஒப்பிட்டுக் காணலாம்.

  • " காலையே போன்றிலங்கும் மேனி கடும்பகலின்

வேலையே போன்றிலங்கும் வெண்ணிறு-மாலையின் தாங்குருவே போலுஞ் சடைக் கற்றை மற்றவற்கு வீங்குருளே போலும் மிடறு. தலைவி சிவ பிரான் மீது காதல் மிகுதியும் கொண்டாள். இந் நிலையினை அறிந்த செவிலி பின்வருமாறு குறிப்பிடு கின்றாள்: இவளுடைய முலை கள் இன்னும் சரியாக அரும்பவில்லை; பற்கள் மு ைத்து வரவில்லை. சொற்கள் பொருள் விளங்கிக் கொள்ளமுடியாத மழலைத்தன்மை யுடையன. கூந்தல் நன்கு வளரவில்லையாதலின் கூட்டி முடிக்கக் கூடிய நிலையில் இல்லை. இவை இவ்வாறிருப் பவும், சிவன் அணிந்த கொன்றை மலரின் மனம் கமழப் பெறுகின்றது இவளுடைய மேனி. இஃது என்ன காரனம் H 27. - 5 26. 28. அற்புதத் திருவந்தாதி; 65. 26. பொன வண்ணத்தந்தாதி: 25 - 1-2.