பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/619

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

624 என்று தெரியவில்லை. இது கொண்டு அயலார் கூறும் கட்டுரைப் பொருள் இன்னதென்று தெரியக் கூடவில்லை" என்று செவிலி தலைவி.பால் இரக்கம் மிகுதி தோன்றக் கூறினாள்.: சிவபிரான் .ெ க ா ண் ட தவத்திருக்கோலத்திற் சடாபாரம் விளங்கும் சிறப்பினை 39 ஆம் பாடல் குறிப் பிடுகின்றது.

இறைவனின் சடை தாழவுள்ளது; கங்கை அச் சடையின் மேலுளது; கங்காதே வி அங்கு மகிழ்ச்சியுடன் விளங்குகின்றாள். அச் சடைமேல் திங்கள் ஒளிர்கின்றது. பிறை சடையினுாடு இயங்குகின்றது. சீற்றங்கொண்ட பாம்புகள் அங்குள்ளன. ஆயினும் அப் பாம்புகள் அங்கு மகிழ்ந்து வாழ்கின்றன. சடையின் மேல் கொன்றை மாலை சூடப்பட்டுள்ளது. "ே

நெடுநாள் வா ழ ைவ க் கு ம் நெல்லிக்கனியினை உண்டமையால் சிவனை மறக்கும் முதுமைத் தளர்ச்சி தனக்கில்லை என்று ஆசிரியர் ஒரு பாடலில் கூறுகின்றார்.' 41 ஆம் பாடல் பக்திச் சுவையினைப் பலபடியாகப் பேசுகின்றது.

  • நீ எழுந்தருளியுள்ள திருக்கோயிலின் பெருமைகளைப் பலர்க்கும் உரைப்பேன்; தலையால் வணங்கி, மனத்தால் நின்னை இடைவிடாது சிந்தித்து, அன்பெனும் நெய் சொரிந்து தவவேள்வியை வளர்ப்பேன். மேலும் சொன் மலராகிய விளக்கை ஏற்றி, ஈசன் என் மனத்தகத் தான் என்று பிறரிடம் கூறிப் பூக்களைச் சொரிந்து அருச்சிப்பேன்.

29. பொன்வண்ணத்தந்தாதி; 27. 30. нъ o 9 3 39. 31. 2. 40. 32. 41 ، و و.