பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 அவர்களை முற்றுகையிட்டு வளைத்து, அவர்கட்கு விருப்பமான ஊன் கலந்து அட்ட சோற்றினையும் துவரைத் துவையலையும் தந்து அவர்களை நட்பாக்கிப் பின்னர்த் தான் நிகழ்த்திய போர்களில் அவர்கட்கும் மெய்ம் மறையாய் நின்று அன்பு சுரந்தான். இதனையே பதிகம், ஏனை மழவரைச் செருவிற் சுருக்கி மன்னரை யோட்டி என்று குறிப்பிடுகின்றது. இப்படையெடுப்பின்போது சேரலாதன் கொங்கு நாட்டில் ஆன்பொருநை நதிக்கரையில் (ஆம்பிராவதி) உள்ள கொங்கு வஞ்சி என்ற நகரத்தின் அரண்களை வலிமை மிக்கதாக்கி, ஆங்குச் சேரர் குடித் தோன்றிய செல்வன் ஒருவனை நாடு காவல் செய்யுமாறு பணித்தான். இடைக்காலச் சோழர் காலத்தில் கொங்கு வஞ்சி சோழர்க் குரியதாகி, இராசராசபுரம் என்ற பெயரினையும் பெற்றது. சோழர் கல்வெட்டுக்கள், நறையனூர் நாட்டுக் கொங்கு வஞ்சியான ராஜராஜபுரம் என்று குறிக்கின்றன. இப்போது கோயம்புத்துார் மாவட்டத்தில் தாராபுரம் என அழைக்கப்படும் ஊர் இடைக்காலச் சோழர் காலத்தில் -இராஜாதி ராஜச் சதுர்வேதி மங்கலம்' என அழைக்கப் பட்டது. இவன் குடிமக்களைக் குழவி கொள்பவரின் காத் தோம்பிய காரணத்தினால் பதிகம் இவனை, குழவி கொள்வாரிற் குடிபுறங் தந்து என்று குறிப்பிட்டுள்ளது. இவன் முப்பத்தெட்டாண்டு அரசியல் நடத்தினான். இவனை ஆறாம் பத்தால் விளங்கப் பாடியவர் நல்லிசைப் புலமை மெல்லியராகிய காக்கைபாடினியார் நச்செள்ளை 67. பதிற்றுப்பத்து. 55. 68. A. R. No. of 146 of 1920.