பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/620

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

625 இறைபணிகட்கு ஆகா உறுப்புகள் அனைத்தும் பயனற்றவை என்ற கருத்தை வெளியிடுகின்றது ஒரு பாடல் . . 8 43 ஆம் பாடல் மிகச் சிறந்த கருத்தினை வெளியிடு கின்றது. :இறைவன் அருளால் அல்லாமல் , இவ் வையத்தையே பொற்குன்றங்களாகப் பெற்றாலும், அதனை நஞ்சினும் கீழாகவே கருதுவேன்; ஈசன் அருளால் புழுவின் பிறவி எடுக்க நேர்ந்தாலும் அதனைப் பொன் னுலகத்து வாழும் வானவர் பிறவியோடு ஒப்ப மதிப்பேன்’ என்ற கருத்தமைந்த பாடல் வருமாறு: 5 # தனக்குன்ற மாவையஞ் சங்கரன் றன்னரு ளின் றிப் பெற்றால் மனக்கென்று நஞ் சிற் கடையா நினைவன் மதுவிரியும் புனக் கொன்றை யாணரு ளாற்புழு வாகிப் பிறந்திடினும் எனக் கொன்றும் வானவர் பொன்னுல கோடொக்க வெண்ணுவனே. தலைவிமாட்டுக் காமன் அம்பெய்து காதலெரி மூட்டு தலைத் தலைவி கடிந்து பேசுகின்றாள். தான் சிவன்பால் கொண்ட காதலைத் தன் செயலாகக் கூறாமல், காமனே இவ்வாறு கனலூட்டித் தன் மனத்தைக் காய்கின்றான் என்றாள். சங்கரன் என் உள்ளத்தில் நன்குறைவது அறிந்திருந்தும் என் மேனியின் பேரொளியை மன்மதன் தன் அம்பெய்து கவர்ந்து கொண்டான். அவனுக்கு இறைவன் திறத்துப் பிழை செய்வதே குறிக்கோள் போலும் என்று தலைவி குறிப்பிட்டாள். தாருகா வனத்து மகளிர் கூறுவதாகக் காணும் பாடல்கள் இரண்டிலும் (45, 4) இறைவன் எவ்வுயிர்க்கும் 33. பொன் வண்ணத்தந்தாதி, 42. 34. 43 ג כ. 35. z 3 44. சே. செ. இ.40