பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/621

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

626 செந்தண்மை பூண்டொழுகும் அந்தண வடிவு கொண்டு வந்திருப்பது, மகளிரின் உள்ளத்தினையும் உயிரினையும் வருத்துவதற்கே யன்றிப் பிறிதொன்றிற்கில்லை என்ற வாறு. ே பாங்கியின் சிறைப்புறக் கூற்றாக வரும் பாடல் நயங் கெழுமியதாகும். தோழியே! அப்பனான பெருமான் நின் மார்பகத் திற்குத் தன் கொன்றை நிறத்தை அருளினன். நின் கண்கட்குக் கங்கை வெள்ளத்தையே வைத்தனன். நின் மனத்துக்குத் தான் சூடிய உத்தமமான உன்மத்தத்தையும் அமைத்தனன். இங்கனமாகவும் நீ ஏது பெருமை குறித்து நீ அப்பெருமானைச் சினந்து அரவாரிக்கின்றாய்?" என்பதாகும்." அடுத்த பாடல் (50) பொருள் முரண் அமைந்து கவிதை நலம் மிகுந்து கிடக்கக் காணலாம். கார் காலத்துக் கொன்றைப் பூவினை அணிந்துள்ள சிவபிரான் பால் நீரும் அனலும், திங்களும் அரவும், தவயோகமும் உமைபாகமும், உருவும் அருவும், வேங்கை யும். மானும், பகலும் இரவும் ஆகிய பகைப் பொருள்கள் யாவும் ஒற்றுமையுடன் கலந்துள்ளன என்று தோழி வியந்து கூறுவதாக அமைந்துள்ளது. இறைவன் திரு முன்னர் உலகப் பொருள்கள் அனைத்தும், தம்முள் வேற்றுமை தவிர்த்துக் கலந்து உறைகின்றன என்ற அரிய கருத்தினை இப்பாடல் அழகுற விளக்குகின்றது.* 53ஆம் பாடல் ஈசன் பெருமைகளைப் பேசுகின்றது. நீதியானவன், பழைமை என்பதற்கும் நால் வேதங்கட்கும் முதலானவன், ஏழ்கடல்களையும் துறைகளையுங் கொண்ட சத்த தீவங்கட்கும் உரியவன், கயிலாய மலையில் சக - - 36. பொன்வண் ணத் தந்தாதி; 45.46. 37. 49 ג ב. 38. 50 כ כ.