பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/622

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

627 உறைபவன், பழைமை குறையாத இறைவன், எண்வகை குணத்தினன், மனத்தில் உறைபவன், நாகாபரணன் என்று இறைவன் இப்பாடலில் குறிக்கப் பெறுகிறான்."" உடன்போக்கிற்கு ஒருப்பட்ட தலைவிக்குத் தோழி வழிப்படுத்தி உரைத்தது' என்ற துறையமைந்த பாடல் 54 ஆம் பாடல். பெண்ணே! தாய், தந்தை, ஆயம் என்பார் பெயர்களையும் குணங்களையும் கூறுதலொழிந்து புன்சடையான் நாமங்களைச் சொல்லுக. அவன் பல்குணங்களையே உரைக் க. உன்னோடு இதுகாறும் பிரியாமல் இருந்த யானும் உன்னை நீங்கினேன். இறைவன் பின்னே போவாயாக. அவன் விரும்பும் வண்ணம் நடந் தொழுகுவாயாக. இவ்வாறு செய்வதே தவப்பயனாகும். அவ் வீரன் கூறிய வண்ணமே- அவற்றையே குறியாகக் கொண்டு மற்றவற்றை ஒழிவாயாக’ என்ற கருத்தமைந் துள்ளது அப்பாடல்." தோழி கூற்றாக அமைந்துள்ளது அடுத்த பாடல் (55). :இவ்வணங்கின் முகம் மன்மதனின் படைவீடாம். அவ்வீட்டு வாயில்களில் நிற்கும் தோரணக் கால்களாம் இவள் தோள்கள். (அம் மனையின் முன் நிறுத்தப் பட்டிருக்கும்) மன்மதனின் தேராகும் இவள் அல்குல். அங்கு மங்கலமாக முன் வைக்கப்பட்ட பூரண கும்பங். களாகும், இவள் கொங்கைகள். இவற்றை யாவருங். காணும் வண்ணம், இறைவன் திருவடிகளில் விழுந்து இவள் தொழுகின்றாள். இவ்வாறு இவள் தொழுவதன் கருத்து, அன்பின் பொருட்டோ, பகைமையின் பாற்பட்டோ என்பதனை யான் அறியேன்." சிவபிரான் பல்வேறு வடிவாகவும் விளங்குகின்றார் என்ற கருத்தைக் கொண்டது 57 ஆம் பாடல். 39. பொன்வண்ணத்தந்தாதி, 53. 40. 54 ג ת. 41. 55 גג.