பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/623

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

628 = கறுத்த கழுத்துடைமையால் இருளாவர். திருமேனி நிறத்தால் பகலாவர். வேதவுருவானமையின் மலையாவர். சூடிய கொன்றைப் பூவால் முல்லை நில மாவர். பாம்புகள் விளையாடுவதால் புற்றாவர். சந்திரனைத் தலையிற்றாங்கி புள்ளமையின் விசும்பாவர். கங்கை நீரைக் கொண்டுள்ள மையின் கடலாவர். இவ்வாறு தம்மருளால் இறைவன் பற்பல வடிவுகளாக ஆயினர் என்று வியந்து கூறியவாறு.

இருளார் மிடற்றா லிராப்பகல்

தன்னால் வரைமறையாற் பொருளார் கமழ் கொன்றை யான்முல்லை புற்றர வாடுதலாற் றெருளார் மதிவிசும் பாற்பெளவங் தெண்புனல் தாங்குதலால் அருளாற் பலபல வண்ணமு மாவர னாயினனே. ! தலைவியின் பிரிவாற்றாத துன்பத்தினைக் கண்டு தோழி இரங்கிக் கூறுவதாக 58 ஆம் பாடல் அமைந்துள்ளது. இவளுடைய இடையில் உள்ள உடைகள், பிரிந்த தலைவரான (ஈசனான) அந்தணரது வாய்மொழிபோல நெகிழலாயின. கைவளைகளும் கழன்று விழுந்தன. கண்ணிர்த் துளிகள் கொங்கைகளிடைப் பரவின. இவள் ஆயிழைகளும் மன்மதனின் கைவாளால் அறுபட்ட நூல்கள் போல் ஆயின : இறைவன் தன்னிடத்து வரும் போது தான் நிகழ்த்தப் போகும் ஊடற் செயல்களைத் தலைவி படைத்து மொழிவதாக அமைந்துள்ளது 63 ஆம் பாடல். விரும்பிய மணமிக்க மலராம் கொன்றையந் தாரை இறைவன் தரினும் நான் பெறப் போவதில்லை. என் ஆடையையும் அவனைத் தொடவிட மாட்டேன். என் 42. பொன்வண்ணத்தந்தாதி, 57. 43. 58 3 ג.