பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/624

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

629 தலையுச்சியினைத் தீண்டினால் கோபிப்பேன். அதனையும் மீறி அவன் என் கொங்கைகளைத் தொடப் புகுந்தால் என் கற்புநிலை கெடுவேன்; வானவர் வணங்க நின்ற நின் தலைமைக்கு இஃது அழகன்று என்பேன். என் தொடி பணிந்த தோள்களைத் தொட முனைந்தால் அவனுடைய திருவாணை மொழியைக் கூறித் தடுப்பேன். : கிடங்கினுள் விழுந்த முதலை, அதனுள்ளிருந்து உணவுக்காக அகப்படும் பிறவற்றை எதிர்ப்பார்த்தும், வெளியேற முடியாமல் தவித்தும் வாழும். இந் நிலை பினைக் கேவலரானவர் பலர், தாம் தொடங்கிய இல்வாழ்க்கை நிலையில் நின்று, இல்வாழ்க்கைக்குரிய அறங்களைச் செய்து பயன்பெறாது அவ்வாழ்க்கையை வெறுத்து வீணே துறப்பர்; அவ்வாறு துறந்தவர், தம் பற்றினைச் சிவன்பால் வைத்தல் செய்யார்; ஆகவே மறுமைப் பயனைப் பெற ஈசனுக்கும் ஆளாகாமல், இம்மைப் பயன்பெற மனைவாழ்க்கைக்கும் உதவாமல் வாழும் நிலைக்கு உவமித்துள்ளார்:

  • தொடங்கிய வாழ்க்கையை வாளா

துறப்பர் துறந்தவரே அடங்கிய வேட்கை யரன்பா லிலரறு காற்பரவை முடங்கிய செஞ்சடை முக்கணா னார்க்கன்றி யிங்குமன்றிக் கிடங்கினிற் பட்ட கராவனை யார்பலர் கேவலரே. 48 உமையொரு பாகனாக வீற்றிருக்கும் சிவபெருமானின் திருவுருவத்தைச் சிறப்பிக்கிறது 65ஆம் பாடல்.

ஈசன் வலம் பூண்பது கழல்; இடம் பூண்பது பாடகம்; வலமணிவது நாகாபரணம்; இடமணிவது அரதனாபரணங்

44. பொன்வண்ணத்தந்தாதி 63. 45. 64 תג.