பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/625

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

630 கள்; வலப்பாற் பூசுவது நிருநீறு, இடப்பாற் பூசுவது செஞ்சாந்து; வலமேந்தியது அனல்; இடமேந்தியது பந்து: வலப்பாற் பூண்பது எலும்பு மாலை; இடப்பாற் பூண்பது பொன்னரிமாலை, வலமேந்தியது வேல்; இடமேந்தியது சக்கரம்; வலப் பக்கத்தில் உள்ளது சடைமுடி; இடப்பக்கம் உள்ளது அள கபாரம். ே 'ஈசனது சடை எரியும் நெருப்பினை யொத்துள்ளது. அத்தீயினை அவித்தற் பொருட்டுத் தேவர்கள் Թ ցո հակւի பாற்கடலை ஒத்துள்ளது கங்கை; அக்கங்கையில் இயங்கும் இடம் போன்றுள்ளது பிறை மதி; அவ்வோடத்தினைச் செலுத்தற்குரிய வலிய மூங்கில் போன்றுள்ளன வலிய பாம்புகள்' என்று ஒரு பாடல் குறிப்பிடுகின்றது.47 பிறை நிலா பற்றிய கற்பனை யமைந்த நயங்கெழுமிய பாடலாக அமைந்துள்ளது 68வது பாட்டு.

இறைவன் சடையிற் புனைந்துள்ள வெண்பிறை, ஆண்டுறையும் அரவுகள் பெருமூச்செறிதலால் வெதும்பும்; அதுவே கங்கை வளாவுதலால் குளிர்கின்றது; உமாதேவி ஊடுங்காலத்து இறைவன் அவள் காலடிகளில் தன் தலையை வைத்துப் பணிதலால் உடல் நைந்துருகும்; அதுவே அவ்வூடல் தணிந்து உமாதேவியை அவன் திண்டும் போது இவ்வுலகையும் வானுலகையும் விளங்கச் செய் கின்றது. இவ்வாறு துன்பமும் இன்பமும் மாறி மாறி அஃது அடையா நின்றது. o

70-வது பாடல் உயர்ந்த கருத்தமைந்ததாயுளது. 'ஈசன் திருப்பெயரைக் கூறுமின்: அவனுக்கே குற்றேவல் செய்மின்; அவனைத் தரிசனம் செய்து கண்கள் குளிர்மின். மனத்தை ஒருவழிப்படுத்துமின்; அவன் ஒருவனே பரம் பொருளென்று தெளிமின்; கோபம் அடக்குமின்; அவாவை 46. பொன்வண்ணத்தந்தாதி: 65. === - 47. . 67 גל. 48. H. H. 68.