பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/627

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

632 தழைத்த காது, தோலாக வற்றிய முலை, சுழன்ற மயிர், பிளவுபட்ட வாய், அதட்டிக்கட்டி யுரைக்கும் இரைந்த குரல், வாடிய வயிறு, பின்னிய விரல் இவற்றை யுடையன வாக விளங்குகின்றன பேய்கள். ! சிவபெருமான் நினக்கு அருள்புரிவான் என்று தோழி சொல்ல, அவன் தனக்குச் செய்த மாயச் செயல்களைத் தலைவி கூறுவதாக அமைந்துள்ள பாடல் (77) நடை நலமும் பொருள் நலமும் நிறைந்து காணப்படுகின்றது.

ஈசன் அயலாரை அலர் துாற்றச் செய்தான். காமநோயினை என்மாட்டுப் பெருகச் செய்தான். முன்கை வளைகள் கழன்றுவிழச் செய்தான். அன்றில் (தன் குரலால் என் நெஞ்சை) ஈரும்படி செய்தான். தென்றல் என் உயிர்மேற் சீறிவரச் செய்தான். மேலும் துன்பங்கள் மலியுமாறு செய்தான். துகில்மேலணிந்த மேகலையையும் நழுவச் செய்தான். இவையே அப்பெருமான் என்பாற் செய்த மாயச் செயல்கள் என்று தலைவி தோழியிடம் குறிப்பிட்டாள்:

மொழியக்கண் டான்பழி மூளக்கண் டான்பிணி முன்கைச்சங்கம் அழியக்கண் டானன்றி லீரக்கண் டான்றென்ற லென்னுயிர்மேற் கழியக்கண் டான்றுயர் கூரக்கண் டான்றுகில் சூழ்கலையுங் கழியக்கண் டான்தில்லைக் கண்ணுத லான்கண்ட கள்ளங்களே.' தோழி கூற்றாக வரும் பாடலில் (78) நயமான கற்பனையொன்று அமைந்திருக்கக் காணலாம். 'நீலகண்டரே! இவள் கைகளில் அணிந்துள்ள வளையல்களையே குறிக்கொண்டு வந்து கொள்ளுதல் 51. பொன்வண்ணத்தந்தாதி; 75. 52. 5 * 77.