பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/628

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

633 செய்தீர். அவை நீ கூத்தாடும் மயானத்தில் பூக்கும் விளாவின் மலரோ, எலும்போ, சூடிய கொன்றையோ, தோலுடையோ, திருநீறோ, வேறு உடையும் அணி கலமுமோ தெரிந்திலேம். இவ்வாறு நீவிர் கவர்ந்து கொள்ள இச்சிறுமி உமக்குக் கடமைப் பட்டதென்னோ' என்றவாறு. ே யாயினும், தன்பால் வந்த அவனுக்குத் தன் பரந்த நெஞ்சில் தங்கத் தலைவி இடங் கொடுத்தாள். இதற்குக் கைம்மாறாக அப்பெருமான் துன்பத்தை இவளுக்குத் தந்தனன். பெரிய மரக்கிளையொன்றன் தாளை அக்கிளை மேல் அமர்ந்துகொண்டே வெட்டுதல் போலாம் இச் செயல்' என்று தோழி கூறுவதாக அமைந்துள்ளது அடுத்த பாடல். ! ஈசனுக்குத் தான் கடமைப் பட்டது ஒன்றுமில்லை

  • பிரமன் தலையை அரிந்ததும், சலந்திரனை அழித் ததும், மன்மதனை எரித்ததும், முப்புரங்களை எரித்ததும், கங்கையின் வெள்ளத்தைச் சடையில் தாங்கியதுமாகிய இச்செயல்கள் நின் பெரும் புகழைப் பறைசாற்று வனவாகும். இவற்றை அறிந்த யான் நீவிர் இவளுடைய சிலவாகிய வளையல்களையும் நெகிழ்த்துப் பறித்த செயலை நோக்கி, இது உங்கட்குப் பழியாகுமே என்று எண்ணி வருந்துகின்றேன்' ' என்று தோழி மேலும் கூறினாள். .

செவிலி கூற்றாக வரும் அடுத்த பாடலில் (82) பண்டையளல்லாத, பரிசறியாத சிறுமியின் நிலை பேசப் படுகின்றது.

இச்சிறுமி பெருமூச்செறிகின்றாள்; அ வ் வ ர று மூச்செறிதல் சாம்பிராணிப்புகை போல வெளித்தோன்று

53. பொன்வண்ணத்தந்தாதி; 78. 54. 3.5 80. 55 81. ג כ