பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/629

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

634 கின்றது. மனந்தளர்ந்து தன் கண்களினின்று மேனி ଘ H ■ * -- r ■ - யெங்கும் வழிய நீர் சொரிகின்றாள். நினைவு மாறு கின்றாள். நீலகண்டப் பெருமானைத் தன் கண்களில் தாபித்துக் கொள்ளுகின்றாள். வெண்ணகை புரிகின்றாள். இத்தகைய தன்மைகள் இப்போது இவளிடம் சார்ந் துள்ளனவாகையால் இவள் நாம் எண்ணிய பழைய நிலைமையில் உள்ளவளாக இல்லை. இறைவனின் இணையற்ற கருனைப் பெருக்கினையும் அதே சமயத்தில் தன்பால் அருளற்ற தன்மையுடையனா யிருத்தலையும் எண்ணித் தலைவி இரங்கிக் கூறுவதாக அமைந்துள்ளன. அடுத்த செய்யுள்கள் இரண்டும் (83, 84). ‘'எதிர்த்த கூற்றிற்குக் கூற்றாகும்; பிறவிப் பிணிக்கு அரு மருந்தாகும்; சிந்திக்குமிடத்துச் சிந்தாமணிபோன்று தவும் தித்திக்கும் அமுதமுமாகும்; இவை யாவும் அரனடி யார்க்கு அமைகின்றன. ஆயினும் என்பாலோவெனில் யான் வந்திக்குமிடத்துமட்டும் என்பால் வந்து மயக்கஞ். செய்கின்றான். 7 'தில்லைச் சிவனது திருவடிகளைக் கைதொழுதும், தீவினைப் பயனால் என் மேகலையையும் கைவளை களையும் யான் இழந்தேன். ஒரு நிலைப்படாத இவ்வுல கின் கண் ஆகக்கூடியவற்றை அழிக்கவல்லார் யார்? போகக் கூடியவற்றை யாவரே நிலைநிறுத்தவல்லவர்? 5 ஆவன யாரே யழிக்கவல் லாரமை யாவுலகிற் போவன யாரே " என்ற தொடர் உயரிய கருத்தினை உள்ளடக்கியதாகும். வெறி விலக்கல்' என்பது ஒர் அகப்பொருள் துறை. தலைவிக்குற்ற ேந ா ய றி ந் து நிமித்த மறியலுற்ற 56. பொன் வண்ணத்தந்தாதி; 82. 57. 5 : 83. 58. in 3 84.