பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61 யாராவர். அவர்க்குச் சேரலாதன் கலன் அணிக" என ஒன்பது காப்பொன்னும், நூறாயிரம் காணமும் கொடுத்துத் தன் பக்கத்தே கொண்டான் என்று பதிகம் குறிப்பிடு கின்றது. தன் பக்கத்துக் கொண்டான் என்பதனைத் தன் திருவோலக்கத்துச் சான்றோருள் ஒருவராகக் கொண்டான் என்பதை ஆராய்ச்சி அறிஞர் சிலர் பிறழ உணர்ந்து, காக்கைபாடினியாரை இவன் மணந்துகொண்டதாகக் குறிப்பிட்டு விட்டனர். அது தவறாகும். - வாரா ராயினும் இரவலர் வேண்டித் தேரிற் றந்தவர்க் கார்பத னல்கும் சேரலாதன் என இவன் பாராட்டப்படுவதனால் இவன் கொடைமடம் பட்ட சேரமான் ஆவன். செல்வக் கடுங்கோ வாழியாதன் புலனழுக்கற்ற அந்தணாளனும், பொய்யா நாவினரும், குறிஞ்சி பாடுதலில் வல்லவருமான கபிலர் ஏழாம் பத்தில் செல்வக் கடுங்கோ வாழியாதனைப் பாடியுள்ளார். மலையாள மாவட்டத்தில் பொன்னானி, பாலைக் காடு, வைநாடு, வள்ளுவநாடு, குறும்பர் நாடு, கோழிக் கோடு, ஏர்நாடு முதலிய மாவட்டங்களைத் தன்னகத்தே கொண்டது பொறை நாடாகும். இப்பொறை நாட்டில் குறும்பர் நாடு என்பது ஒரு பகுதியாகும். இப்பகுதியில் மாந்தரம் எனப் பெயரிய மலையொன்றும், அதனையடுத்து மாந்தரம் என்னும் முதுரரும் உண்டு. இவ்வூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட வேந்தர்கள் மாந்தரன் என்றும், மாந்தரம் பொறையன் என்றும், மாந்தரம் சேரல் இரும்பொறை என்றும் வழங்கப் பெற்றனர். மாந்தரஞ் சேரர்களுள் மிக்க பழையோனாகப் பழம்பாடல்களில் காணப்படுபவன் மாந்தரம் பொறையன் கடுங்கோ கங்து 69. பதிற்றுப்பத்து; 55 10-11.