பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/630

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

635 தோழிக்கோ அன்றிச் செவிலிக்கோ தலைவி கூறுவதாக அமைந்துள்ள பாடல் வருமாறு : தோழி! (எனக்குற்ற காதல் நோயை விளைவித்த தெய்வம் இன்னதென அறிய வேண்டிப் பிற நிமித்திகரை நாடி) நீ விரைய வேண்டா. குலம் நலம் கல்வி யாவும் மெய்யான அப்பெருமான் திருவடி மலர்களே என்று கல்விவலார் புகழும் நிறைவுள்ள நெஞ்சினையே யான் வேண்டியது. நீ விரும்பிய வேலன், கணி முதலியோரிடம் என் பெருமானைக் காண முயலுதலால், என் நெஞ்சம் பெரிதுங் கலக்கம் அடைகின்றது. இந்த வுலகம் அழியும் கடையூழியினிறுதியில் எம் பெருமான் நிகழ்த்தும் திருக்கூத்தினைச் சிறப்பிக்கிறது. 86 ஆம் பாடல். பெருங்கடல்கள் கலங்கின. கரிய மலைகள் வீழ்ந்தன. மண்ணுலகம் கீழே ஆழ்ந்தது. எட்டுப் பெரிய பாம்புகளும் நிலை குலைந்தன. பதினெண் கணங்களும் மருட்சி கொண்டன. நீண்ட சடைமுடி வானத்தைக் கடந்து மின்னி விளங்கியது. தேவரெல்லாம் வியப்புற்றனர். இவ்வாறு ஊழித்தீயின் கண் ஆடுங் கூத்தை இனி யாவர் மகிழ எம்பெருமான் ஆடுவதோ? தெரிந்திலேன்' என்னும் கருத்தமைந்தது இப்பாடல்." விண்ணை மடங்க விரி நீர்பரந்து வெற்புக் கரப்ப மண்ணை மடங்க வருமொரு காலத்தும்' என்ற திருக்கோவைத் தொடர் ஈண்டு ஒப்பு நோக்குதற். குரியதாகும். 59. பொன்வண்னத்தந்தாதி 85. 60. 5 : 86. -- 61. திருக்கோவையார்; தன் துணிபுரைத்தல்; 75.