பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/631

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

636 செவிலி தலைவி திறத்தில் இரங்குவதாயமைத்த பாடலின் (87) பொருள் வருமாறு: முக்கட் பெருமானுக்கு இவள் எம்முறையினள்? அவன் திறத்தில் இவள் செய்த பிழை என்னே! ஈசன் இவளுக்கு எலும்பாக உடலை ஆக்கினன். மேலும் தளர்ந்த நிலையில் இருக்கும் இவளது அரைக்கலையையும் அவன் கவரக் கருதினன். யான் வணங்குந் தெய்வமும், தேவாதி தேவனும், உமையொரு பாகனுமானவன் இவள் திறத்தில் இங்ங்னம் புரிவது யாது கருதியோ?” என்று செவிலி இரங்கிக் கூறினாள்.' எண் தோளுடைய ஈசனுக்குத் திரிகரணங்களாலும் நிலைபெயராமல் திருத்தொண்டினை முக்கரண சுத்தி யோடு செய்தவர் மேருமலை போன்று ஓங்கி என்றும் நிலை பெறக் கூடியவர் என்று கூறுவர் அறிந்தோர் என்னும் அரிய கருத்தினை வெளியிடுகின்றது 88-வது பாடல். “ ------------ எண்டோட் இவற்கு மனஞ் சொற்செய்கை கிலைபிழை யாது.குற் றேவல் செய் தார் கின்ற மேரு வென்னும் மலைபிழை யாரென்ப ராலறிந் தோர்களிம் மாநிலத்தே' "இறைவனின் இயல்புகளையும் பெருமைகளையும் அயன் அரி போன்றாரும் ஆய்ந்து உள்ளபடியே உணர்ந் தாரல்லர் எனில் அவன் தன்மைகளை அறிந்து, சிறு மானிடராகிய யாம் சிறந்த கவிகளால் எங்ங்னம் பாட வல்லேம்? என்ற அடக்கத்தைப் புலப்படுத்துகின்றது அடுத்த பாடல் (82). 62. பொன்வண்ணத்தந்தாதி; 87. 63. 5 : 88.