பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/633

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

638 சிவபெருமான் திருமூர்த்தியுருவாயுள்ளான் என்று கூறுவது 95.வது பாடல். ஈசனது பெயர்கள் அரன் அயன் அரி என்பன. அவன் வாழும் பதி வெற்பு (கயிலை), அலர் (பதுமம்), நீர் (பாற்கடல்) ஆகும். அவனது நிறம் எரி (வண்ணம்), பொன் (வண்ணம்), கார் (வண்ணம்) ஆம். அவன் மாலைகள் கடுக்கை (கொன்றை), கமலம், துழாய் என்பனவாகும். அவன் ஊர்திகள் இடபம், அன்னம், கருடன் முதலியனவாம்.'" இப் பேதைப் பருவத்தாளாகிய பெண் பேசுவன யாவும் இறைவனது திருநாமங்களே. வெறுப்பற்ற இவளது வேட்கை முழுதும் ஈசன் மாட்டேயுளது. அவன் முடிக்கணிந்த கொன்றையையும், பூசிய சாந்தையும் தன் மார்பகங்களிற் கொண்டு ஈசனைத் தழுவ எண்ணி இவள் அவனைத் தொழுது நின்றாள். இக் கூற்று என்றும் பொய்யற்றதாகும். இவ்வாறு தோழி தலைவி எம் பெருமான் மாட்டுக் கொண்ட காதலைப் புலப்படுத் தினாள்: பேசுவ தெல்லா மரன்றிரு நாமமப் பேதை நல்லாள் காய்சின வேட்கை யரன்பா லதுவறு காற்பறவை மூசின கொன்றை முடிமே லதுமுலை மேன்முயங்கப் பூசின. சாந்துந் தொழுமா லிவையொன்றும் பொய்யலவே. 8 நரகம் புகுவதாயினும், இம்மை யின்பங்களைத் துறக்க நேர்ந்தாலும், ஊர்வன நடப்பன பறப்பனவாகிய தாழ் பிறவிகளிற பிறந்து துன்புற்று இறந்தாலும், இவ்வுல கையே அரசாண்டாலும், ஈசனின் கழலடி மறவாத SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS 67. பொன்வண்ணத்தந்தாதி; 96. 68. * + 97.