பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/634

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

639 வரமொன்றையே யான் வேண்டுவேன்' என்று தலைவி கூறுவதாய் அமைந்த அரிய பாடல் வருமாறு: பொய்யா நரகம் புகினுங் துறக்கினும் போந்து புக்கிங் குய்யா வுடம்பினொ டுர்வ நடப்ப பறப்பவென்று நையா விளியினும் நானில மாளினும் நான்மறைசேர் மையாம் மிடற்றா னடிமற வாவரம் வேண்டுவனே. 69 இக் கருத்துடன் தொண்டரடிப் பொடியாழ்வாரின் பாடலொன்றனை ஒப்பிட்டுக் காண்க. பச்சைமா மலைபோல் மேனி பவளவாய் கமலச்செங்கண் அச்சுதா அமர ரேறே ஆயர்தம் கொழுந்தே என்னும் இச்சுவை தவிர யான்போய் இந்திர லோக மாளும் அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகரு ளானே. " 'மக்கட்கு விதிக்கப்பட்ட ஆயுட் காலத்தில் பாதி இரவிற் கழிந்து விடுகின்றது. மிகுதி பாதியுள், நோய் பெருகுவதற்குரிய முதல் நிலை பிள்ளைப் பருவமாகும். அதன் பின்னர் அமைந்தது முதுமைப் பருவம், இவ்விரு வகைப் பருவங்கட்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் அச்சம், வெகுளி, அவா, அழுக்காறு ஆகிய தீய குணங்கள் ஆட்சி செலுத்துகின்றன. இவ்வாறாகக் கால முழுதும் வினே கழிந்தன. எனவே, இ ப் பே ா ே த யாம் முக்கட் பெருமானைத் தியானித்து உய்வோமாக." 69. பொன்வண்ணத்தந்தாதி; 98. — 70. நாலாயிரத் திவ்விய பிரபந்தம்; திருமாலை : 2.