பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/636

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

641 கற்குன்றுந் தூறுங் கடுவெளி யுங்கடற் கானல்வாய்ப் புற்கென்று தோன்றிடு மெம்பெரு மான்புன வாயிலே." பொன்வண்ணத்தந்தாதியினை இயற்றிய சேரமான் பெருமாள் நாயனார் சேர வமிசத்து அரசர் என அறிகின்றோம். இக் கருத்தினை உறுதிப்படுத்திக் கொள் வதற்கு அகச் சான்றுகள் ஏ. து ம் கிடைக்கவில்லை. இருப்பினும் இந்நூலின் 98 ஆம் பாடலில் நானிலம் ஆளினும் என்ற தொடர் ஒன்றை இவர் பெய்துள்ளார். அப்பாடல் வருமாறு: பொய்யா நரகம் புகினுந் துறக்கினும் போந்து புக்கிங் குய்யா உடம்பினொ டூர்வ நடப்ப பறப்ப என்று நையா விளியினும் நானிலம் ஆளினும் நான் மறைசேர் மையார் மிடற்றான் அடிமற வாவரம் வேண்டுவனே' நானிலம் ஆள்வதினும் இறைவனை மறவா மனத் தினையே இவர் பெரிதும் வேண்டுகிறார். பொறி புலன்கள் செலுத்தும் நெறியில் வாழ்வோர் வாழ்வு அவலம் நிறைந்ததாகும். அவ்வாறு செல்வோன் சிவன்பால் சித்தத்தை நிலை நிறுத்த முடியாது. இக் கருத்தினைச் சான்றோர் பலர் குறித்துச் சென்றுள்ளனர். திருவள்ளுவர் பெருமான், அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும் வேண்டிய வெல்லா மொருங்கு என்றும், பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு." என்றும் குறிப்பிட்டுள்ளார். திருநாவுக்கரசர் பெருமான். 73. சுந்தரர் தேவாரம், ஏழாம் திருமுறை, திருப்புன வாயில் : 4. 74. பொன் வண்ணத்தந்தாதி; 98. 75. திருக்குறள், துறவு : 3. .10 وو ، و , .76 சே. செ. இ.41