பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/638

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

643 அவர் இறைவன் மாட்டுத் தாம் கொண்ட ஈடுபாட்டினை யும் அவனை வாழ்த்தி வணங்கும் வந்தனைக்குரிய முறை களையும் புலப்படுத்தியுள்ளார்: சிந்தனை செய்ய மனமமைத்தேன் செப்ப நாவமைத்தேன் வந்தனை செய்யத் தலையமைத் தேன்கை தொழ அமைத்தேன் பந்தனை செய்வதற் கன்பமைத் தேன்மெய் யரும்ப வைத்தேன் வெந்த வெண்ணிறணி ஈசற் கிவையான் விதித்தனவே. 31 முன்னோர் மொழியைப் பொன்னேபோல் போற்றல் ' உரனென்னுங் தோட்டியா னோரைந்துங் காப்பான் வரனென்னும் வைப்பிற்கோர் வித்து. 2 என்ற திருக்குறட் கருத்தினை,

    • ..... .... பழியே விளைக்கும்பஞ்

சேந்திரியக் குஞ்சரமுந் தெழித்தேன். ே என்ற பாடலிற் காணலாம். ' கனியே கழலடி யல்லாற் களைகண்மற் றொன்றுமிலேன் 84 என்ற இவரது பாடல் தொடர், ' கண்ணிலேன் மற்றோர்களை கண் ணில்லேன் கழலடியே கைதொழுது காணின் அல்லால் . என்ற திருநாவுக்கரசரின் தேவாரப் பாடலை அடியொற்றி யதாகும். 81. பொன்வண்ணத்தந்தாதி; 92. 82. திருக்குறள், நீத்தார் பெருமை : 4. 83. பொன்வண்ணத்தந்தாதி; 23. 84. 40 ג כ. 85. திருநாவுக்கரசர் தேவாரம்; ஆறாம் திருமுறை; திருப்புகலூர் : 1.