பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 என்பவனாவன். இவன் கொடை வழங்குவதில் கோடா நெஞ்சினன் என்று பரணர் பாடியுள்ளார். மாந்தரம், பொறையன் கடுங்கோப் பாடிச்சென்ற குறையோர் கொள்கலம் போல உவவினி வாழி நெஞ்சே." இவன் அறவழியில் ஆட்சியை நடாத்தியவன் என்பது, அறன்வாழ்த்த நன்காண்ட விறல்மாந்தரன்' என்ற பதிற்றுப்பத்துத் தொடரால் அறியலாகும். இவனையடுத்து, ஒள்வாள் கோப்பெருஞ் சேரல் இரும்பொறை என்பான் சேரநாட்டைப் புரந்திருத்தல் வேண்டும். இவனே கொங்கு நாட்டில் வடக்கே பூவானி யாறு வரையும், கிழக்கே கொங்கு வஞ்சி (தாராபுரம்) வரை யும் பரவியிருந்த பொறைநாட்டைக் கீழ்க்கொங்கு நாட்டுக் கருவூர் வரையில் பரப்பிய முதற் சேரமான்' என்றும் காவிரிக்கு வடகரையில் உள்ள மழநாட்டைச் சோழர் கைப்பற்றினாராக, இக்கோப்பெருஞ்சேரல் அவரோடு ஒள்ளிய வாட்போர் உடற்றிக் கீழ்க் கொங்குநாட்டையும் அதற்கு நேரே காவிரியின் வடகரையில் கொல்லிமலை வரையில் இருந்த மழநாட்டையும் வெற்றி கொண்டான் என்றும், பின்னர்ச் சோழரொடு உறவுகொண்டு, கருவூர்க்கு அணித்தே ஒடும் ஆன்பொருநை ஆற்றின் கரையிலிருந்த ஊரின் பழம்பெயரை கருவூர் என்று மாற்றியும், அந்நகரின் நேர் வடகரையில் விளங்கிய மழநாட்டுப் போரூரின் பெயரை மாற்றி முசிறி என்ற பெயரையும் இட்டனன் என்றும், இடைக்காலக் கல்வெட்டுக்களில் கருவூர், கருவூரான வஞ்சி மாநகரம் என்றும், அமராவதி என T70. அகம் 142 47. 71. பதிற்றுப்பத்து; 90:12-13. 72. ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை, பண்டை நாளைச் சேர மன்னர் வரலாறு, ப. 185. 73. A. R. No. 166 of 1936-37. - _