பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/642

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

647. தோழியின் கூற்றாக வரும் அகப்பொருட்சுவை யமைந்த பிறிதொரு பாடல் பாநயம் நிறைந்து காணப்படு கின்றது. :யானையை அலறத் தாக்கி வெற்றி கொள்ளும் சிங்கம் ஒரு சிறிய எலியை வாட்டுதல் அதன் பெருமைக் கிழுக்காகும் செயலாகும். சிங்கம் இவ்வாறு எலியைக் காய்வது பெருமை குன்றிய செயலாவது மட்டு மன்றிப் பழி மிகுந்த செயலுமாகும். அதுபோன்றே பிரம்மா முதலிய புகழ் பிறங்கியவரை வெற்றி கொண்ட சிவபிரான் எளிய தலைவியின் கைவளைகளைக் கவர்ந்து வெற்றி பெறுவ ராயின் அச்செயலால் அவர்க்குப் பெருமையும் வாராது; மாறாகப் பழியுமாகும் என்ற கருத்தமைந்த பாடல் கழிபெரும் கவிதை இன்பம் தருவதாகும். தறித்தாய் அயன்தலை சாய்த்தாய் சலந்தரனைத் தழலாப் பொறித்தாய் அனங்கனைச் சுட்டாய் புரம்பனலுஞ் சடைமேற் செறுத்தாய்க் கிவைபுகழ் ஆகின்ற ஈண்டிவள் சில்வளையும் பறித்தாய்க் கிதுபழி ஆகுங்கொலாம் என்று பாவிப்பனே. சிவனடி சிந்திக்கும் அருள் நெஞ்சம் துணி துவைக்கும் துறைக்குச் சென்று துணி துவைத்து விட்டு வீடு திரும்பும் வண்ணான் முதுகில் ஒட்டியிருந்த உவர்மண் மழைநீர் பட்டதால் வெளுத்துப் பூத்துச் சிவனின் வெண்ணிற்றினை ஒத்திருந்தது. நகர்வலம் வந்த சேரமான் பெருமாள் இதனைக் கண்ணுற்று வாரமேடமே நினைப்பித்தீர்’ என்று யானையினின்றும் இவர்ந்து வண்ணானின் காலில் விழுந்து வணங்கச் செல்ல, அவன் அடிவண்ணான்' என்று சொல்லி ஒதுங்கப் பதிலுக்கு அடிச்சேரன்" என்று மொழிந்த-அடக்கமே உருவானவர் - = o 99. பொன்வண்ணத்தந்தாதி; 81.