பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/643

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

648 சேரமான் பெருமாள். பக்தி வலையிற்பட்ட மெய்யன் பு நிறைந்த நாயனார் அருள் நெஞ்சமும் நன்கு வாய்க்கப் பெற்றிருந்தார். தான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்' என்னும் பரந்த நெஞ்சினராக வாழ்ந்த கொடை நெஞ்சு கோணாத நாயனார், அவ்வருள் நெஞ்சத்தோடு பாமணக்க நாமணக்கப் பாடியுள்ள பாடல் வருமாறு: கூறுமின் ஈசனைச் செய்மின் குற் றேவல் குளிர்மின் கண்கள் தேறுமின் சித்தம் தெளிமின் சிவனைச் செறுமின் செற்றம் ஆறுமின் வேட்கை அவலம் இவை நெறியா ஏறுமின் வானத் திருமின் விருந்தாய் இமையவர்க்கே. 109 அணிநயம் நாயனாரின் பாடல்களில் பா நலமும் நடை நலமும் சிறக்க மிளிர்வதனைக் கண்டோம். ஈண்டு அணிநலம் அவர் பாடல்களில் அழகுற அமைந்து கிடக்கும் மாட்சியினைக் காண்போம்: * -

  • சாற்றுவன் கோயிற் றலையும் மனமும் தவமிவற்றால்

ஆற்றுவன் அன்பெனும் நெய்சொரிங் தாற்றிய - சொல்மலரால் ஏற்றுவன் ஈசன்வந் தென்மனத்தான் என்றெழுந் தலரே தூற்றுவன் தோத்திரம் ஆயினவே இனிச் - - - -- சொல்லுவனே. இப் பாடலில் அன்பெனும் நெய் சொரிந்து ஆற்றிய அஞ்சொல் மலரால் ஏற்றுவன்’ என்ற உருவக அணியும், :ஈசன் என் மனத்தான் என்றெழுந்து அலரே துாற்றுவன்’ -- _____

*===

100. பொன்வண்ணத்தந்தாதி 70. 101. "41 . ג ג.