பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/644

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

649 என்பதில் அலரே துாற்றுவன் என்ற சொற்களில் (அலரே துாற்றுவன்-பழி பரப்புவேன், மலர் தூவி வழிபடுவேன்) சிலேடை அணியும் அமைந்திருத்தல் காணலாம். சந்திரன் தோன்ற அதற்கிணையாக மின்மினியும் பறந்தொளிர்கின்றது; அதுபோலத் தேவர் குழாம் நற் சொற் கவி சொல்லtயானும் புன்சொற் கவி தொடுக்கலா னேன். என்ற கருத்த மைந்துள்ள பாடல் வருமாறு: அருளால் வருநஞ்ச முண்டுகின் றாயை அமரர் குழாம் பொருளார் கவிசொல்ல யானும் புன் சொற்கள் புணர்க்கலுற்றேன் இருளா சறவெழின் மாமதி தோன்றவு மேன்றதென்ன வெருளா தெதிர்சென்று மின்மினி தானும் விரிகின்றதே " என்ற பாடலில் எடுத்துக்காட்டுவமை அமைந்துள்ளது. விரிகின்ற ஞாயிறு போன்றது மேனியஞ் ஞாயிறு சூழ்ந் தெரிகின்ற வெங்கதி ரொத்தது o செஞ்சடை யச்சடைக்கீழ்ச் சுரிகின்ற காரிருள் போன்றது கண்டமக் காரிருட்கீழ்ப் புரிகின்ற வெண்முகில் போன்றுள தாலெங்தை யொண்பொடியே.' 198 என்ற பாடலிற் பல வயிற் போலியுவமை அமைந்துள்ளது. 71ஆம் பாடலில் சிலேடையணியும், 95ஆம் பாடலில் நிரனிறைய னி யும் அமைந்துள்ளன. r" | - 103. " : "26 ,"" : " و و.