பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/645

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

650 சேரநாட்டு வழக்குகள் நூலாசிரியர் சேரநாட்டினராதலால் சேர நாட்டுச் சொல் வழக்குகள் சில இப் பாடல்களில் வந்துள்ளமை காணலாம். (1) மாடம் பதி-கோயில் (அ) மடத்தின் தலைவர் (8) (2) செத்துதல்-அரிதல், சிறிது சிறிதாக வெட்டுதல் - (18) (3) போதம்-அறிவு (19) (4) கங்கள்-எங்கள் (36) (5) பறைகின்ற-சொல்லப்படும் (72) இசை, கூத்து வகைகள் சீகாமரப்பண் காமரம் என 16ஆம் பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது. «ւյrr 6ծծfi கொள வுமையாள் பண்ணியன் பண்ணியல் பாடலன் என்ற தொடர் உமாதேவி தாளத்தை அறுதியிடத் தான் பண்ணுடன் பாடலை இசைப்பவன் என்பதனைப் புலப்படுத்துகின்றது. ஆடல்பாடல்களுடன் ஈசன் நிகழ்த்தும் கூத்தில், உமாதேவி தாளம் தருதல் வழக்கம். இதனை, நீ காபால மாடுங்கால் முத்துறழ் முறுவலாள் முற்பாணி தருவாளோ' என்ற கலித்தொகைக் கடவுள் வ ா ழ் த் து ச் செய்யுளால் அறியலாகும்.

பண்டரங்கன்' என்று சிவனைக் குறிப்பிடுகின்றது ஒரு பாடல் (32). பாண்டரங்கக் கூத்தினை ஆடுபவன் என்பது இதன் பொருள். பாண்டரங்கக் கூத்து சிவனாடல்களில் ஒன்று என்பதனைக் கலித்தொகைக் கடவுள் வாழ்த்துக் கொண்டும், சிலப்பதிகாரங் கொண்டும் அறியலாம்.

பழமொழி பழமொழி ஒன்றும் ஒரு பாடலில் (73) கையாளப் பட்டுள்ளது. ஒரூர் இரண்டஃகம் காட்டல்' என்பது